ஆற்றில் குளிக்க சென்ற இரண்டு பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு!!

Photo of author

By Savitha

ஆற்றில் குளிக்க சென்ற இரண்டு பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு!!

Savitha

திருப்பூர் நொய்யல் ஆற்றில் குளிக்க சென்ற இரண்டு பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு.

சிட்கோ அக்ரஹாரம் வீதியைச் சேர்ந்த சந்துரு(12) மற்றும் எம். எஸ். நகரை சேர்ந்த இனியன் (10) ஆகிய இரண்டு பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு.
ஊத்துக்குளி போலீசார் விசாரணை.

திருப்பூர் மாநகரத்திற்கு உட்பட்ட நொய்யல் ஆற்றில் தொடர்ந்து விடுமுறை தினம் என்பதால் குளிப்பதற்காக ஏழு அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் சென்றுள்ளனர்.

இதில் சிட்கோ அக்ரஹாரம் வீதியைச் சேர்ந்த சந்துரு(12) மற்றும் எம். எஸ். நகரை சேர்ந்த இனியன் (10) ஆகிய இரண்டு பள்ளி மாணவர்கள் குளிப்பதற்காக நீரில் இறங்கி ஆற்றில் தண்ணீர் குறைவாக சென்றாலும் ஆழமான சேற்றில் சிக்கி உள்ளனர்.

நீச்சல் தெரியாத காரணத்தால் இருவரும் புதை குழி பகுதியான சேற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.மற்ற மாணவர்களின் அலறல் சத்தம் கேட்பது தொடர்ந்து அருகில் உள்ளவர்கள் மற்ற ஐந்து மாணவர்களை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.

இதுகுறித்து ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை எடுத்து ஊத்துக்குளி போலீசார் உயிரிழந்த இரண்டு பள்ளி மாணவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே பகுதியைச் சேர்ந்த இரண்டு பள்ளி மாணவர்கள் இறந்தது சிட்கோ பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.