தலை நரையை கருமையாக்க இயற்கை ஹேர் டை வகைகள்!! பயன்படுத்தினால் 100% பலன் கிடைக்கும்!!

Photo of author

By Divya

தலை நரையை கருமையாக்க இயற்கை ஹேர் டை வகைகள்!! பயன்படுத்தினால் 100% பலன் கிடைக்கும்!!

Divya

தலை நரையை கருமையாக்க இயற்கை ஹேர் டை வகைகள்!! பயன்படுத்தினால் 100% பலன் கிடைக்கும்!!

இன்றைய காலத்தில் இளநரை சாதாரண விஷயமாகி விட்டது. இந்த இளநரை எட்டி பார்க்க தொடங்கிவிட்டால் சிறு வயதிலேயே வயதான தோற்றத்தை பெறும் சூழல் ஏற்பட்டு விடும். இந்த இளநரை பிரச்சனையை இயற்கை முறையில் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எளிய தீர்வு காண்பது சிறந்த தீர்வாக இருக்கும்.

இளநரை ஏற்படக் காரணம்:-

*இரசாயனம் கலந்த ஷாம்பு பயன்படுத்துதல்

*தலைக்கு எண்ணெய் வைக்காமல் இருத்தல்

*ஆரோக்கியமற்ற உணவு முறை

*மன அழுத்தம்

*தலை முடி வறட்சி

தலை நரையை கருமையாக்க இயற்கை ஹேர் டை வகைகள்:-

*ஒரு கப் கருவேப்பிலையை வாணலியில் போட்டு கருகும் வரை வறுத்து பொடி செய்து கொள்ளவும். பின்னர் அதில் 1 தேக்கரண்டி கற்றாழை ஜெல் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். இந்த ஹேர் டையை தலை முடிகளின் வேர் பகுதிகளில் படுமாறு தடவி 1 மணி நேரம் வரை ஊறவைத்து ஷாம்பு இல்லாமல் முடியை நன்கு அலச வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தோம் என்றால் வெள்ளை முடி கருமையாக மாறும்.

*ஓரு கைப்பிடி அளவு கற்பூரவள்ளி இலைகளை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும். அடுத்து இதை ஒரு பவுலுக்கு வடிகட்டி 2 வைட்டமின் ஈ மாத்திரையை சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை முடிகளின் வேர்காள் பகுதியில் படும் படி மஜாஜ் செய்து 1 மணி நேரத்திற்கு பின் தலையை அலசிக் கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் நரை முடி கருப்பாக மாறத் தொடங்கும்.

*ஒரு கைப்பிடி அளவு கற்பூரவள்ளி இலை மற்றும் 15 செம்பருத்தி பூவின் இதழ்களை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும். பின்னர் இந்த பேஸ்டை கொதிக்க விட்டு 1 தேக்கரண்டி வெள்ளை கரிசலாங்கண்ணி பொடி சேர்த்து வதக்கி ஆற விடவும். அடுத்து 2 தேக்கரண்டி அளவு அவுரி பொடி சேர்த்து கலந்து கொள்ளவும்.

இந்த ஹேர் டையை முடிகளின் வேர்காள் பகுதியில் படும்படி தடவி 30 நிமிடங்கள் ஊற விட்டு தலையை அலசிக் கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் நாள்பட்ட நரை முடி கருப்பாக மாறத் தொடங்கும்.

*அடுப்பி கடாய் வைத்து 2 தேக்கரண்டி மஞ்சள் சேர்த்து நன்கு கருக விடவும். பின்னர் அடுப்பை அணைத்து ஆற வைக்கவும். பிறகு கற்றாழை மடலில் இருந்து 2 தேக்கரண்டி அளவு கற்றாழை ஜெல்லை எடுத்து அதில் சேர்த்து கலந்து விடவும். பிறகு சிட்டிகை அளவு உப்பு சேர்த்து கலந்து மீண்டும் நன்கு கலந்து கொள்ளவும். இந்த ஹேர் டையை முடிகளின் வேர்காள் பகுதியில் படும்படி போட்டு அப்ளை செய்து கொள்ளவும். இதை 1 மணி நேரம் வரை விட்டு பின்னர் மையில்ட் ஷாம்பு உபயோகித்து கூந்தலை அலசிக் கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் நாள்பட்ட நரை முடி கருப்பாக மாறத் தொடங்கும்.