தாத்தாவை மிஸ் பண்ணும் உதயநிதி! ட்விட்டர் பக்கத்தில் என்ன கூறினார் தெரியுமா?
திமுக ஆட்சியின் பெரும் தலைவரான மு.கருணாநிதி 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி மறைந்தார்.பல சர்ச்சைகள் மத்தியில் அவரது உடல் மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டது.அதனையடுத்து திமுக பத்தாண்டு காலமாக ஆட்சியை கைப்பற்ற வில்லை.தற்போது நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 159 இடங்களில் திமுக வெற்றியடைந்தது.பத்து வருடங்கள் கழித்து கிடைத்த வெற்றியால் இவர்களின் ஆதிக்கம் அதிகளவு காணப்படும் என மக்கள் மனதில் ஓர் சில கேள்விகள் இருந்தது.ஆனால் பத்து வருடங்கள் கழித்து ஆட்சி செய்வதாலும் அதிலும் முதல் முறையாக மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக ஆட்சியில் அமர்வாதினாலும் நல்லாட்சியை அமைக்க முயற்சி செய்து வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின் ஆட்சி அமர்ந்த நாள் முதல் பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு செய்து வருகிறார்.இன்று மறைந்த முன்னால் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாள்.அவரது நினைவிடத்திற்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின்,மகளிரணி செயலாளர் கனிமொழி,இளைஞரணி தலைவர் மற்றும் எமஎல்ஏ-வான உதயநிதி மற்றும் அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.அதனையடுத்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் முன்கள பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்தார்.
அதனையடுத்து உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது தாத்தாவை பற்றி உருக்கமாக கூறியுள்ளார்.அவர் அதில் கூறியது,நான் செய்யும் செயல்களை அனைவரும் பாராட்டினாலும் தன்னை கலைஞர் பாராட்ட முடியாத ஏக்கம் என்னுள் உள்ளது.அவர் வழியில் தற்பொழுது ஸ்டாலின் அவர்கள் உள்ளார்.அவரை நாம் பிடித்துக்கொண்டு தமிழ்நாட்டின் உயர்வுக்கு நாம் உழைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.தனது போராட்ட பெருவாழ்வில் கோடான கோடி மக்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றிவிட்டு தனது அண்ணன் பக்கதிலேயே மறைந்த முன்னால் முதல்வர் கருணாநிதி ஓய்வு எடுத்து கொண்டிருக்கிறார் என்று கூறினார்.உதயநிதி கடைசியாக வாழ்க கலைஞரின் புகழ் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.