அமலாக்க துறையின் கையில் அடுத்ததாக சிக்கும் உதயநிதி!! பீதியில் கட்சித் தலைமை!!
செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை எடுத்த நடவடிக்கையால் தமிழகத்தில் பரபரப்பு என்ற பேச்சுக்கு பஞ்சமில்லாமல் உள்ளது. தினம் தோறும் இது ரீதியான வழக்குகள் மற்றும் தகவல்கள் ஊடகங்கள் வழியாக வந்த வண்ணமாக தான் இருக்கிறது.
செந்தில் பாலாஜி போல அமலாக்கத்துறையின் அடுத்த குறி யார் என்று பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. அந்த வரிசையில் இரண்டாவதாக இருப்பது செந்தில் பாலாஜி தம்பி தான். அவருக்கு தான் தற்பொழுது அமலாக்கத் துறையினர் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளனர்.
இவர்களை அடுத்து வேறு எந்த அமைச்சர்கள் இதில் சிக்க போகிறார்கள் என்று பதட்டமான சூழ்நிலையை நிலவி வருகிறது. அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் இருக்கலாம் என அரசியல் சுற்று வட்டாரங்கள் பேசுகின்றனர்.
ஏனென்றால் சமீப காலத்தில் தான் உதயநிதி அறக்கட்டலைக்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தையும் அமலாக்க துறையினர் கைப்பற்றினர். எனவே அடுத்ததாக இவரை அமலாக்கத் துறையினர் டார்கெட் செய்துள்ளதாகவும் தொடர்ந்து இவரை கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதிலிருந்து விடுபட தற்போதையிலிருந்தே உதயநிதி மற்றும் ஸ்டாலின் இருவரும் அதற்கான பணிகளை செய்து வருவதாக கூறுகின்றனர்.