அடேங்கப்பா! நைட் டைமில் உள்ளாடை இன்றி தூங்குவதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா!!

இரவு உறக்கம் ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமான ஒன்றாகும்.நாள் முழுவதும் வேலைப்பளு,மன அழுத்தம்,மனச்சோர்வு,உடல் சோர்வை சந்திக்கும் நீங்கள் இரவில் நிம்மதியான தூக்கம் கிடைப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

சிலர் இரவில் உள்ளாடைகளை அகற்றிவிட்டு தூங்கும் பழக்கத்தை கடைபிடிக்கின்றனர்.பகல் நேரங்களில் அணியும் உள்ளாடைகள் அசௌகரியத்தை உண்டாக்குவதால் இரவில் அதை கழற்றிவிட்டு உறங்கவே பெரும்பாலானோர் விரும்புகின்றனர்.

இறுக்கமான உடைகளை அணிவதால் உடலில பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.உடலில் சுரக்கும் வியர்வை வெளியேறாமல் ஆடைகளிலேயே ஒட்டிக் கொள்கிறது.இதனால் சருமப் பிரச்சனைகள்,வியர்வை துர்நாற்றம் போன்றவை ஏற்படுகிறது.

இதனால் இரவில் உள்ளாடை அணியாமல் உறங்க பலர் விரும்புகின்றனர்.நைலான் உள்ளாடைகள் மற்றும் இறுக்கமான உள்ளாடைகளை அணிவதால் சருமத்தில் சுவாச திறன் பாதிப்பு ஏற்படும்.

உடலில் இருந்து அதிகப்படியான வியர்வை வெளியேறி ஈரப்பதம் அதிகரிக்கிறது.இதனால் உடலில் பாக்டீரியா வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டு சரும எரிச்சல்,தொற்று பாதிப்புகள் ஏற்படுகிறது.

பெண்கள் இறுக்கமான உள்ளாடைகள் அணிவதால் பிறப்புறுப்பு தொற்று பாதிப்பை சந்திக்கின்றனர்.பிறப்புறுப்பு பகுதியில் அரிப்பு,எரிச்சல் போன்றவை ஏற்படுகிறது.எனவே இரவு நேரத்தில் உள்ளாடைகள் இன்றி படுத்தால் நிம்மதியான தூக்கம் கிடைப்பதோடு மன அழுத்தம்,சருமம் சார்ந்த பாதிப்புகளில் இருந்து தப்பிக்க முடியும்.ஆனால் உள்ளாடை இன்றி உறங்கும் பொழுது கவனமுடன் இருக்க வேண்டும்.சுகாதார சூழலை உறுதி செய்த பிறகு உள்ளாடை இன்றி உறங்க வேண்டும்