பாகிஸ்தானில் எதிர்பாராத நடந்த சோகம்

0
130
கைபர் பக்துங்வா என்ற மாகாணம் பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில்  மொஹமண்ட் மாவட்டத்தில் உள்ளது. இங்கு பளிங்கு கல் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த குவாரியில் நேற்று வழக்கம் போல் ஏராளமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சற்றும் எதிர்பாராத வகையில் திடீரென பெரிய பாறை ஒன்று சரிந்து தொழிலாளர்கள் மீது விழுந்தது.
இதில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து அங்கு உடனடியாக மீட்பு குழுவினர் குவிக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன.
எனினும் 22 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. மேலும் 15 முதல் 20 பேர் வரை இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று தெரிகிறது. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
Previous articleஇவர்களெல்லாம் தமிழுணர்வை கற்றுத்தர களமிறங்கியது தமிழினத்தின் தலையெழுத்து! தங்கர்பச்சான் விமர்சனம்
Next articleடிரம்ப்புக்கு கிடைக்க போகும் அந்த பெருமை