உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்க சிறப்பு தூதர்களாக செல்லும் மத்திய அமைச்சர்கள்!

0
69

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருவதால் அங்கே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது ரஷ்யாவின் ஆக்ரோஷமான தாக்குதல் காரணமாக, உக்ரைன் உருக்குலைந்துள்ளது.

மேலும் அந்த நாட்டிலுள்ள மக்கள் சாரைசாரையாக அண்டை நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வருகிறார்கள். உக்ரைன் நாட்டின் அண்டை நாடுகளும் தங்கள் நாடுகளுக்கு அகதிகளாக வரும் உக்ரைன் நாட்டு மக்களை தாயுள்ளத்தோடு அரவணைத்துக் கொள்கிறார்கள்.

இதுவரையில் உக்ரைன் நாட்டின் அண்டை நாடுகளில் உக்ரைன் நாட்டிலிருந்து வரும் மக்களுக்கு தங்குமிடம், உணவு, உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பல நாடுகளும் செய்து கொடுத்திருக்கின்றன.

இந்த நிலையில், ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக, போர்க்களம் ஆகியுள்ள உக்ரைனில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சிக்கி இருக்கிறார்கள். இதில் பெரும்பாலும் மாணவ, மாணவிகள், தான் அதிகம்.

ரஷ்யப் படைகளின் தாக்குதல் காரணமாக, உக்ரைனிலிருந்து இந்தியர்களை நேரடியாக அமைத்து இயலவில்லை. ஆகவே ருமேனியா, ஹங்கேரி, போன்ற அண்டை நாடுகளுக்கு இந்தியர்களை அழைத்து வந்து அங்கிருந்து விமானங்கள் மூலமாக இந்தியா அழைத்துவரப் படுகிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

அந்த விதத்தில் கடந்த 4 தினங்களாக பல விமானங்கள் மூலமாக 1000க்கும் மேற்பட்டோர் இந்தியா அழைத்துவரப்படுகிறார்கள். அதோடு இந்த பணிகள் தொடர்ந்து இரவு பகலாக நடைபெற்று வருகிறது.

ஆகவே இந்த பணிகளை மேலும் வேகமெடுக்க செய்யும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று மறுபடியும் ஆலோசனை செய்தார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல் உட்பட பல்வேறு அமைச்சர்களும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷவர்தன், உள்ளிட்ட அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றதாக தெரிகிறது.

இந்த கூட்டத்தில் உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகளை வேகப்படுத்தும் இந்தப் பணிகளை ஒருங்கிணைப்பதற்கு 4 மத்திய அமைச்சர்களை உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு நேரடியாக அனுப்பி வைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.

அதாவது, ருமேனியா, மால்டோவா. சுலோவாக்கியா, ஹங்கேரி, போலந்து, உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த மத்திய அமைச்சர்களை அனுப்புவது என்று முடிவு செய்யப்பட்டது என தெரிகிறது.

சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, வீட்டுவசதி துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் வி கே சிங், உள்ளிட்ட 4 அமைச்சர்கள் இந்தப் பணிகளுக்காக அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

இதில் ருமேனியா மற்றும் மால்டோவா நாடுகளுக்கு ஜோதிராதித்ய சிந்தியாவும், சுலோவாகியாவுக்கு கிரன் ரிஜிஜுவும், போலந்துக்கு வி.கே. சிங்கும் சிறப்பு தூதர்களாக செல்கிறார்கள் என சொல்லப்படுகிறது.