இதன் காரணமாக இனி வரும் நாட்களில் மின்வெட்டு ஏற்படும் அபாயம்! என்ன செய்ய போகிறது அரசு?

0
208

இதன் காரணமாக இனி வரும் நாட்களில் மின்வெட்டு ஏற்படும் அபாயம்! என்ன செய்ய போகிறது அரசு?

கர்நாடகத்திற்கு சுமார் 800 முதல் 900 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ராய்ச்சூர் அனல் மின் நிலையத்தில் மொத்தம் எட்டு மின் உற்பத்தி அலகுகள் உள்ளன. அதன் மொத்த மின் உற்பத்தி திறன் 1,720 மெகவாட். அதில் நிலக்கரி பற்றாக்குறையால் நான்கு அலகுகள் மூடப்பட்டுள்ளன. மீதமுள்ள நான்கு அலகுகளில் தான் தற்போது மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. அதன் மூலம் 630 மெகாவாட் தான் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

அதில், பெங்களூருவுக்கு மட்டும் தினமும் 103 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது எழுபது மெகாவாட் தான் வினியோகம் செய்யப்படுவதாக மின்சாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். விரைவில் கோடை காலம் தொடங்க உள்ளது. இதனால் அடுத்து வரும் நாட்களில் மின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில், கர்நாடகத்தில் நீர்மின் உற்பத்தி நிலையங்களில் 1,700 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறன் உள்ளது. ஆனால் தற்போது 300 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. வரும் நாட்களில் இந்த மின் உற்பத்தி அளவு மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

அவ்வாறான நிலை ஏற்பட்டால், அடுத்து வரும் நாட்களில் பெங்களூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக மின்சாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். மாநிலத்தில் பி.யூ.சி. மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் முடிவடைந்த பிறகு மின்வெட்டு அமல்படுத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Previous articleஉக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்க சிறப்பு தூதர்களாக செல்லும் மத்திய அமைச்சர்கள்!
Next articleசிறையில் உள்ள கைதிகள் விடுதலை! போருக்கு தயார்படுத்த உக்ரைன் அதிபர் உத்தரவு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here