ஒழுங்கா ஒன்றிணைங்க.. தீய சக்தி திமுக வை விரட்ட கை கோருங்கள் – இபிஎஸ் ஓபிஎஸ் ஐ அலற விடும் சசிகலா!! 

0
217
Unite properly.. Demand a hand to drive away the evil DMK - Sasikala will scream EPS OPS!!
Unite properly.. Demand a hand to drive away the evil DMK - Sasikala will scream EPS OPS!!

ஒழுங்கா ஒன்றிணைங்க.. தீய சக்தி திமுக வை விரட்ட கை கோருங்கள் – இபிஎஸ் ஓபிஎஸ் ஐ அலற விடும் சசிகலா!!

ஈரோடு மாவட்டத்தில் ஈவேரா மாரடைப்பால் உயிரிழந்ததை அடுத்து தற்பொழுது அங்கு இடைத்தேர்தல் நடத்த முடிவு செய்ததையொட்டி, திமுக அதிமுக பாஜக என அனைத்து கட்சிகளும் இடைத்தேர்தலை எதிர்கொள்ள ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் இணைந்து கையொப்பமிட்டால் மட்டுமே இரட்டை இலை சின்னத்தில் நின்று போட்டியிட முடியும் என்ற பட்சத்தில் ஓபிஎஸ் ஒன்றிணைவதற்கு முன் வந்தாலும் இபிஎஸ் அதற்கு ஒருபோதும் இடமளிப்பதில்லை.

அந்த வகையில் இரட்டை இலை சின்னம் இந்த இடைத்தேர்தலில் முடக்கப்படும் என்று பெரும்பாலானோர் கூறி வருகின்றனர். இதனை ஆளும் கட்சியும் சாதகமாக்கி வருகிறது. இதனையடுத்து தமிழக பாஜக தலைவர் அனைவரும் ஓபிஎஸ் பக்கம் ஒன்றிணையுங்கள் என்று கூறி வருகிறார். இவ்வாறு பலர் தங்களது கருத்துக்களை கூறிவரும் நிலையில் சசிகலா தற்பொழுது பேட்டி ஒன்று அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, நான் உயிருடன் இருக்கும் வரை சின்னத்தை எதுவும் செய்ய முடியாது. ஒரு போதும் சின்னம் முடங்கும் நிலைக்கு செல்லாது, நான் அதனை விடவும் மாட்டேன். நான் பொறுமையாக இருந்து சிலரை எடை போட்டு கொண்டிருக்கிறேன். அதிமுகவில் உள்ள பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அனைத்து பதவிகளும்  தொண்டர்கள் நமக்கு கொடுப்பது.அதை தான் அதிமுக நிறுவனரும் நமக்கு கற்றுத் தந்தது.

தற்போது உள்ள நிர்வாகிகள் செய்யும் நடவடிக்கைகள் அனைத்தும் ஆளும் கட்சிக்கு சாதகமாகவே உள்ள நிலையில் இவர்கள் மீண்டும் ஒன்றிணைந்து தீய சக்தி திமுகவை வீழ்த்த வேண்டும். கட்சிக்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று வேண்டுகோளாக கூறியுள்ளார்.

Previous articleசேமிப்பு கணக்கு வைத்திருக்கிறீர்களா இதோ உங்களுக்கான முக்கிய தகவல்! வங்கி வெளியிட்ட சூப்பர் தகவல்!
Next article23 வருட திருமண வாழ்கைக்கு முற்றுபுள்ளி! தளபதிக்கு இரண்டாவது திருமணம்?