வரலாறு காணாத அளவில் ஏற்பட்ட காட்டுத்தீ

0
217

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் 33-ஆண்டுகள் காணாத அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தீயணைப்புத்துறையினர் கூறியுள்ளனர். கலிஃபோர்னியாவில்,காட்டுத் தீச் சம்பவங்கள் வழக்கமாக நேரும் காலம் முடிவடைய இன்னும் 2 மாதங்கள் உள்ள வேளையில் இத்தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாண்டு ஏற்பட்ட காட்டுத் தீயால், குறைந்தது 7 பேர் இறந்தனர்.  4,100க்கும் அதிகமான தீயணைப்பாளர்கள், 24 வெவ்வேறு தீச் சம்பவங்களில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். தொடரும் காட்டுத் தீச்சம்பவங்கள் 2 மில்லியன் ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை அழித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அது சுமார் 1.5 மில்லியன் காற்பந்துத் திடல்களுக்குச் சமமாகும்.

 

Previous articleகொரோனா காலத்திலும் நெகிழ செய்த பூ வியாபாரிகள்
Next articleஇயக்குனர் பா.ரஞ்சித் இயக்கும் அடுத்தப் படமும் அரசியல் பற்றியா? படத்தின் ஹீரோ யார் தெரியுமா?