தீராத கடனும் சில வாரங்களில் அடைந்து போகும்.. இந்த பரிகாரத்தை செய்தால்!

Photo of author

By Divya

தீராத கடனும் சில வாரங்களில் அடைந்து போகும்.. இந்த பரிகாரத்தை செய்தால்!

வாழ்வில் தீராத பிரச்சனையாக இருக்கும் கடன் பிரச்சனை விரைவில் அடைய கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை அவசியம் செய்யவும்.

இந்த பரிகாரத்தை வீட்டில் அல்லது அரசமரத்து அடியில் ஏற்றலாம். எந்த இடத்தில் தீபம் ஏற்றுவதாக இருந்தாலும் இரண்டு என்ற எண்ணிக்கையில் தான் தீபம் ஏற்ற வேண்டும்.

இந்த தீபத்தை அரச இலையை வைத்து தான் ஏற்ற வேண்டும். இதனால் சனிக் கிழமை அன்று அரச இலையை பறித்துக் கொள்ளவும்.

முதலில் அரச இலையை சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம் வைக்கவும். வீட்டில் தீபம் ஏற்றுபவராக இருந்தால் ஒரு தாம்பூலம் வைத்து அதன் மேல் அரச இலையை வைத்துக் கொள்ளவும்.

அரச இலை மேல் அகல் விளக்கை வைத்து இலுப்பை எண்ணெயை ஊற்றி பச்சை திரியை போட்டு தீபம் ஏற்றவும். இந்த அரச இலை தீபத்தை தொடர்ந்து 16 சனிக்கிழமை ஏற்றி வர கடன் பிரச்சனை முழுவதும் தீரும்.

கடன் தீர்ந்து பண வரவு அதிகரிக்கத் தொடங்கும். அதேபோல் பணம் விரையம் ஆகாமலும் இருக்கும்.