தமிழகத்தில் 22 சதவீதம் வரை பேருந்து கட்டணம் குறைப்பு – மகிழ்ச்சியில் பொதுமக்கள் 

0
152
Up to 22 percent reduction in bus fares in Tamil Nadu - public happy
Up to 22 percent reduction in bus fares in Tamil Nadu - public happy

தமிழகத்தில் 22 சதவீதம் வரை பேருந்து கட்டணம் குறைப்பு – மகிழ்ச்சியில் பொதுமக்கள்

தமிழக தனியார் பேருந்துகளில் அதிக பயண கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது. இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத்தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டு அரசு நிர்ணயிக்கும் கட்டணம் குறித்த விவரங்களையும் வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் தனியார் பேருந்து உரிமையாளர் கூட்டமைப்பு கட்டணங்களை மாற்றியமைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன் தேர்தல் வாக்குறுதிகளை அளித்திருந்தது. இந்நிலையில் ஆட்சிக்கு வந்ததும் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் ஒருசிலவற்றை  ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது.

அந்த வகையில் கடந்த வருடம் தேர்தலை வாக்குறுதியில் கூறப்பட்ட பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டம் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டம் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பையும் பெற்றது. இந்த திட்டம் வந்த பிறகு அரசு பேருந்துகளில் குறிப்பாக இந்த இலவச பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பெண்களுக்கான இலவச பேருந்து திட்டத்தால் போக்குவரத்து துறை நஷ்டத்தை சந்தித்தது. இதுமட்டுமில்லாமல் பெண்கள் தனியார் பேருந்து மற்றும் ஆட்டோக்களில் பயணம் செய்வதும் குறைந்தது. இதனால் அவர்களுக்கும் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த வருடம் நிலவிய கொரோனா பெருந்தொற்றல் பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அதனால் தனியார் பேருந்துகள் முற்றிலும் இயக்கப்படவில்லை. பிறகு பேருந்துகள் இயக்கப்பட்ட போது கொரோனா கட்டுப்பாடுகளால் பயணிகள் வருகையானது தொடர்ந்து குறைந்தது. இந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் வருவாய் இழப்பை ஈடு செய்வதற்காக பயண கட்டணங்களை அதிகரித்தது.

இதனால் அதிருப்தி அடைந்த பயணிகள் உடனடியாக பேருந்துகள் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு தற்போது தனியார் பேருந்துகளில் கட்டணங்கள் 10-22% வரை குறைக்கப்பட்டுள்ளது.

இனி கோவை – சென்னை: ரூ.1,815 முதல் ரூ.3,025 வரை சென்னை – மதுரை: ரூ.1,776 முதல் ரூ.2,688 சென்னை – நெல்லை: ரூ. 2,063 முதல் ரூ. 3,437 வரை பேருந்து கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தனியார் பேருந்து உரிமையாளர் கூட்டமைப்பினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Previous articleஇன்ஸ்டாகிராமில் வளர்ந்த காதல்! கழிவறையில் பிரசவம் – மாணவிக்கு நேர்ந்த சோகம்
Next articleகுழந்தைக்கு சூடு வைத்த கொடூர தாய்: குடிபோதையில் நடந்த விபரீதம்!