இன்ஸ்டாகிராமில் வளர்ந்த காதல்! கழிவறையில் பிரசவம் – மாணவிக்கு நேர்ந்த சோகம்

இன்ஸ்டாகிராமில் வளர்ந்த காதல்! கழிவறையில் பிரசவம் – மாணவிக்கு நேர்ந்த சோகம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியிலுள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி காதலித்த நபரால் கர்ப்பமாக்கபட்டு கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அலங்காநல்லூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த இந்த பெண் பிளஸ்-2 படித்து வந்துள்ளார். இவருக்கு சமீபகலமாக நடத்தப்படும் ஆன்லைன் வகுப்பிற்காக அவரது பெற்றோர் மொபைல் போன் வாங்கி கொடுத்தனர்.படிப்பதற்காக வாங்கி கொடுத்த போன் மூலமாக அந்த பெண் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்.

அந்த வகையில் இந்த செல்போன் மூலமாக இன்ஸ்டாகிராம் கணக்கை ஆரம்பித்துள்ளார்.இதன்  மூலம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சேர்ந்த வெற்றிமணி(வயது 21) என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த நபர் அங்குள்ள காய்கறி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இன்ஸ்டாகிராம்  மூலமாக உருவான பழக்கத்தில் அவர்கள் 2 பேரும் தனியாக அடிக்கடி சந்தித்துள்ளனர்.

இவ்வாறு தனிமையில் சந்திக்கும் போது அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடன் நெருங்கி பழகி உள்ளார். இதனால் அந்த பள்ளி மாணவி கா்ப்பம் அடைந்துள்ளார். மாணவி கர்ப்பமடைந்ததை வீட்டில் யாரிடமும் சொல்லாமல் மறைத்துள்ளார்.இந்தநிலையில் தான் அந்த மாணவிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதையும் யாரிடமும் சொல்லாமல் வீட்டின் கழிவறைக்கு சென்றார். இந்நிலையில் அந்த பிரசவ வலியையும் பொறுத்துக்கொண்டு, கழிவரையிலேயே அவர் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தையை பெற்றெடுத்த அந்த சிறுமி மயங்கிய நிலையில் கழிவரையிலேயே கிடந்துள்ளார். இதற்கிடையே அந்த சிறுமியை தேடிய அவரது குடும்பத்தினர் சென்றபோது, அங்கு அவர் பிரசவித்து தாயும், சேயுமாக கிடந்த காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து அவரது பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தனர். விசாரணையில், வெற்றிமணி என்பவர் தன்னுடன் நெருக்கமாக பழகியதாகவும், அதனால் கர்ப்பமானதாகவும் சிறுமி நடந்தது அனைத்தையும் கூறியுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த சுகாதார செவிலியர் ஒருவர், சிறுமியையும், அந்த குழந்தையையும் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்குமாறு அறிவுறுத்தினார்.

அதன்பின் தாய் சேய் என இருவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக மாவட்ட குழந்தை நல பாதுகாப்பு அலுவலர் கொடுத்த புகாரின் பேரில், சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கர்ப்பமாக்கிய வெற்றிமணியை கைது செய்தனர்.