தூங்கும் பொழுது சிறுநீர் வெளியேறுகிறதா? இந்த பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வீட்டு மருத்துவம்!!

Photo of author

By Divya

தூங்கும் பொழுது சிறுநீர் வெளியேறுகிறதா? இந்த பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வீட்டு மருத்துவம்!!

சிரியவர்களோ,பெரியவர்களோ தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.குறிப்பாக குழைந்தைகள் மற்றும் வயதானவர்கள் தான் இந்த பாதிப்பால் அவதியடைகின்றனர்.

இரவில் தூங்கச் செல்வதற்கு முன் சிறுநீர் கழித்து விட்டு உறங்கவும்.இரவு நேரத்தில் தண்ணீர் போன்ற திரவங்களை உட்கொள்வதை தவிர்க்கவும்.

அதையும் மீறி உறக்கத்தில் சிறுநீர் கழிப்பது தொடர்ந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறையை பின்பற்றவும்.

1)பட்டை
2)பெரு நெல்லிக்காய்

25 கிராம் அளவு துண்டு பட்டையை லேசாக வறுத்து மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.அதேபோல் 3 பெரு நெல்லிக்காயின் சதை பற்றை வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.இதையும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

பின்னர் ஒரு கிண்ணத்தில் அரைத்த பட்டை மற்றும் பெரு நெல்லிக்காய் பொடியை போட்டு மிக்ஸ் செய்து கொள்ளவும்.தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் இந்த பொடி ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்திற்கு தீர்வு கிடைக்கும்.

தூக்கத்தின் போது சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை குறைக்க பட்டை உதவுகிறது.அதேபோல் வைட்டமின் சி சத்து கொண்டுள்ள பெரு நெல்லிக்காய் தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை தடுக்க உதவுகிறது.