இந்திய பெண் இன்ஜினியருக்கு அமெரிக்க குடியுரிமை

Photo of author

By Parthipan K

இந்திய குடியுரிமை பெற்ற பெண் இன்ஜினியருக்கும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் குடியுரிமை வழங்கப்பட்டது. ஜனாதிபதி டிரம்ப் முன்னிலையில் அவர் அந்நாட்டு குடிமகளாக உறுதியேற்றுக் கொண்டார்.அவருக்கு அமெரிக்க குடியுரிமைக்கான சான்றிதழை டிரம்ப் வழங்கினார். அமெரிக்க வெள்ளை மாளிகை வரலாற்றில் இது ஒரு அரிய நிகழ்வாக கருதப்படுகிறது. நிகழ்ச்சியில் டிரம்ப் பேசியது, இந்திய பெண்மணி சுதா சுந்தரி நாராயணன் மிகவும் திறமையான சாப்ட்வேர் டெவலப்பர்.அமெரிக்க குடியுரிமை பெற்ற நீங்கள், அமெரிக்க சட்டவிதிகளை பின்பற்ற வேண்டும் என டிரம்ப் கேட்டுக்கொண்டார்.