அமெரிக்கா ஓபன் டென்னிஸ் : அரையிறுதிக்கு முன்னேறிய ரஷ்ய வீரர்

Photo of author

By Parthipan K

அமெரிக்கா ஓபன் டென்னிசில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஒன்றில் ரஷிய வீரர்களான 3-ம் நிலை வீரர் டேனில் மெட்வெதேவ் – 10-ம் நிலை வீரரான ஆன்ட்ரே ருப்லேவ் ஆகியோர் மோதினார்கள். முதல் செட்டில் இருவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது. இதனால் முதல் செட் டை பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் மெட்வெதேவ் 7(6) – 6(6) என முதல் செட்டை கைப்பற்றினார். 2-வது செட்டை 6-3 என மெட்வெதேவ் எளிதாக கைப்பற்றினார். 3-வது செட்டில் ஆன்ட்ரே ருப்லேவ் கடும் நெருக்கடி கொடுத்தார். இதனால் 3-வது செட்டும் டை பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் 7(7) – 6(5) என கைப்பற்றினார். இதன்மூலம் 3-0 என வெற்றி பெற்று டேயல் மெட்வெதேவ் அரையிறுதிக்கு முன்னேறினார்.