கருப்பான முகம் பளிச்சென்று மாற காபி தூளை இப்படி பயன்படுத்தி பாருங்கள்!!

0
119
#image_title

கருப்பான முகம் பளிச்சென்று மாற காபி தூளை இப்படி பயன்படுத்தி பாருங்கள்!!

நம்மில் பெரும்பாலானோருக்கு முகம் வெள்ளையாக மாற வேண்டுமென்ற ஆசை இருக்கும்.இதற்கு வீட்டில் உள்ள ஒரே ஒரு ஸ்பூன் காபி தூள் மட்டும் போதும் முகத்தில் இருக்கும் டானை இயற்கையான முறையில் எளிதில் அகற்றி விட முடியும்.காபி தூள் பேஸ்பேக் வெயிலினால் மாறிய கருப்பான முகத்தை மீண்டும் பளிச்சென்று மாற்ற உதவும்.இதனுடன் எலுமிச்சை சாற்றை பயன்படுத்த வேண்டும்.எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இதன் சாற்றை முகத்தில் பயன்படுத்துவதினால் முக சுருக்கம் ஏற்படாமல் பொலிவாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

* காபி தூள் – 1 ஸ்பூன்

* எலுமிச்சை சாறு – 3 ஸ்பூன்

* சர்க்கரை – 1 ஸ்பூன்
(அல்லது)
தேன்

செய்முறை:-

1.ஓரு பவுல் எடுத்து அதில் 1 தேக்கரண்டி காபி தூள்,எலுமிச்சை சாறு 3 தேக்கரண்டி மற்றும் சர்க்கரை 1 தேக்கரண்டி சேர்த்து நன்கு கலக்கி கொள்ள வேண்டும்.

2.சுத்தமான தண்ணீரில் முகத்தை கழுவிய பிறகு இந்த ரெமிடியை பயன்படுத்த வேண்டும்.

3.விருப்பப்பட்டால் பச்சரிசி பவுடர்,சர்க்கரைக்கு பதில் தேன் சேர்த்து கொள்ளலாம்.

4. அரை மணி நேரத்திற்கு பிறகு முகத்தை கழுவ வேண்டும்.இந்த ரெமிடியை ஒரு மாதத்தில் குறைந்தது இருமுறை பயன்படுத்தி வரலாம்.

காபி தூளில் கற்றாழை ஜெல் சேர்த்து முகத்திற்கு தடவுதல்,காபி தூளில் பால் சேர்த்து தடவுதல் உள்ளிட்ட எந்த முறைகளை கடைபிடித்தாலும் முக கருமைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

Previous articleபூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா? இதோ !!
Next articleபெண்களே உங்களுக்கு தளர்ந்த மார்பகங்கள் இருக்கின்றதா!!! அதை சரிசெய்வதற்கு இதோ சில டிப்ஸ்!!!