பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா? இதோ !!

0
33
#image_title

பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா? இதோ

பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் அயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்கள் உள்ளன. நாம் சமைக்கும்போது பூண்டை சேர்த்து சமைப்பது வழக்கம். ஏனென்றால், பூண்டில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. இதில் அயோடின் சல்பர் குளோரின் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு உதவி செய்கிறது. பூண்டின் சுவை பல்வேறு உணவுகளுக்கு அற்புதமான சுவையை அளிக்கிறது. பூண்டு ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஆண்டிமைக்ரோபியல் மற்றும் ஆண்டிசெப்டிக் பண்புகளைக் கொண்டுள்ளது.

இன்றும் வாயுத்தொல்லைக்கும், அசீரணத்துக்கும் பூண்டினை வேக வைத்து உண்ணும் பழக்கம் நம்மில் பல பேரிடம் உண்டு. அந்த அளவுக்கு பூண்டு பல மருத்துவ நன்மைகளை வழங்குவதை அறிந்ததால் தான், உலக அளவில் அதன் பயன்பாடு பல பில்லியன் அளவுக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

சரி… வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி பார்ப்போம் –

பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது, எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைக்கிறது.  மற்றும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது. இதய நோய், பக்கவாதம், புற்றுநோய் மற்றும் தொற்று உள்ளிட்ட பல நோய்களை எதிர்த்துப் போராடும் வலிமையை உங்களுக்கு வழங்குகிறது.

நீரிழிவு நோய்

தொடர்ந்து வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டு வந்தால், இரத்த சர்க்கரை அளவு 57% குறையும். அதனால் நீரிழிவு நோயாளிகள் தினமும் காலையில் 4 பூண்டு மொட்டுகளை பச்சையாக மென்று சாப்பிட்டால் நன்மை தரும்.

புற்றுநோய் தடுப்பு:

பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு மற்றும் புற்றுநோய்க்கு எதிராக போராடும். மேலும், புற்றுநோய் வராமல் தடுக்கும். அதனால் காலையில் எழுந்தவுடன் பூண்டு சாப்பிடுவதால் புற்றுநோய் வரும் அபாயம் குறைகிறது.

மூளைக்கு

பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் பூண்டில் உள்ள ஆக்ஸிஜனேற்ற சேதத்தை தடுத்து மூளையைப் பாதுகாக்கிறது. மேலும், பூண்டு சாப்பிடுவதால் மூளை மூடுபனியை எதிர்த்து உங்கள் உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவும்.

மனச்சோர்வு நீங்க

பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், மனிதனின் மன ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இது நமது மனதை சமநிலையில் வைத்துகொள்ள உதவும். மனச்சோர்வை எதிர்த்துப் போராடும் வலிமையை அளிக்கிறது. எனவே, மன அழுத்தத்தைத் தவிர்க்க, அடிக்கடி பூண்டு சாப்பிட்டு வரலாம்.

எடை குறைய :

பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், உங்களது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தும். செரிமானத்தைத் தூண்டும். குடல் ஆரோக்கியத்தை பலப்படுத்தும்.மேலும், எடை இழப்புக்கு உதவி செய்யும்.

குறிப்பு :

பூண்டை  அதை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. பூண்டு அதிகமாக சாப்பிடும் போது சருமத்தில் அரிப்பு மற்றும் தடிப்பு ஏற்படும்.

author avatar
Gayathri