நார் போல் உள்ள உங்கள் தலை முடியை மிருதுவாக்க இதை பயன்படுத்துங்கள்!

0
273
#image_title

நார் போல் உள்ள உங்கள் தலை முடியை மிருதுவாக்க இதை பயன்படுத்துங்கள்!

தலை முடி வெடிப்பு, வறட்சி இல்லாமல் அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் வளர கீழே கொடுக்கப்பட்டுள்ள ஹேர் பேக்கை பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)கற்றாழை ஜெல்
2)வெந்தயம்
3)கறிவேப்பிலை
4)பூந்தி கொட்டை
5)அரிசி
6)செம்பருத்தி இதழ்

செய்முறை:-

ஒரு காட்டன் துணியில் 1/2 கப் வெந்தயம், 1 கப் கறிவேப்பிலை, 1/4 கப் அரிசி, 1 கப் செம்பருத்தி பூ இதழ் போட்டு நன்கு காயவிட்டு எடுத்துக் கொள்ளவும்,.

இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். இந்த ஹேர் பேக் பொடியை ஒரு டப்பாவில் கொட்டி சேமித்து வைக்கவும்.

அடுத்து ஒரு கிண்ணத்தில் சிறிது பூந்தி கொட்டை போட்டு தண்ணீர் ஊற்றி ஊற விடவும். அதன் பின்னர் ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கி அதனுள் உள்ள ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் அரைத்து வைத்துள்ள பொடி நான்கு தேக்கரண்டி அளவு போட்டு கற்றாழை ஜெல் சேர்த்து நன்கு பேஸ்ட் பதத்திற்கு கலக்கவும்.

இந்த பேஸ்டை தலை முழுவதும் அப்ளை செய்து ஒரு மணி நேரத்திற்கு ஊற விடவும். பிறகு ஊறவைத்துள்ள பூந்தி கொட்டை தண்ணீர் கொண்டு தலை முடியை நன்கு அலசி சுத்தப்படுத்தவும்.

இவ்வாறு வாரத்திற்கு இருமுறை செய்து வந்தால் வறண்ட முடி பளபளப்பாக மாறும்.

Previous articleஇந்த ஒரு இலை ஆண்மை குறைபாட்டிற்கு நிரந்தர தீர்வு தரும்!
Next articleதயிரை இப்படியெல்லாம் சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து!! மக்களே அலார்ட்!!