தழும்புகளை அசால்ட்டாக மறைய வைக்க கசகசா வை இப்படி பயன்படுத்துங்கள்!! பவர்புல் வீட்டு வைத்தியம்!!
மேனியில் வெட்டுக்காய தழும்புகள்,தீக்காய தழும்புகள்,அம்மை தழும்புகள் இருந்தால் அவை உடல் அழகை கெடுக்கும் விதமாக இருக்கும்.இதனை எந்த ஒரு கெமிக்கல் க்ரீம் இல்லாமல் இயற்கையான முறையில் மறைய வைக்க இந்த வழிமுறைகள் உதவும்.
தீர்வு 01:-
1)கசகசா
2)கஸ்தூரி மஞ்சள் தூள்
3)வேப்பிலை
ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி கசகசா சேர்த்து 25 மில்லி பால் ஊற்றி 1 மணி நேரத்திற்கு ஊறவிடவும்.
பிறகு இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் இரண்டு கொத்து வேப்பிலையை சேர்த்து அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.
இதை உடலில் உள்ள தழும்புகள் மீது பூசி வந்தால் அவை சில வாரங்களில் மறைந்துவிடும்.
தீர்வு 02:-
1)இலங்க பட்டை
2)தேன்
ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி இலவங்கப்பட்டை பொடி மற்றும் இரண்டு தேக்கரண்டி தேன் சேர்த்து குழைத்து உடலில் ஏற்பட்டிருக்கும் தழும்புகள் மீது பூசிவந்தால் அவை சில தினங்களில் மறைந்து விடும்.
தீர்வு 03:-
1)பேக்கிங் சோடா
2)தழும்பு
ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா(சமையல் சோடா) மற்றும் இரண்டு தேக்கரண்டி தேனை குழைத்து தழும்புகள் மீது பூசி வந்தால் அவை சில தினங்களில் மறைந்து விடும்.
தீர்வு 04:-
1)வேப்பிலை
2)மஞ்சள்
ஒரு கொத்து வேப்பிலை மற்றும் ஒரு துண்டு கஸ்தூரி மஞ்சள் கிழங்கை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.இதை உடலில் இருக்கின்ற தழும்புகள் மீது பூசி வந்தால் அவை சில தினங்களில் மறைந்து விடும்.
தீர்வு 05:-
1)கற்றாழை
2)மஞ்சள்
ஒரு பிரஸ் கற்றாழை மடலை எடுத்து அதன் தோலை நீக்கி அதனுள் இருக்கின்ற ஜெல்லை ஒரு கிண்ணத்தில் போட்டு நான்கு முறை அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.பிறகு இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து தழும்புகள் மீது பூசி வந்தால் விரைவில் அதற்கான பலன் கிடைக்கும்.