பனி காலத்தில் உங்கள் முகம் பளபளப்பாக இருக்க இந்த 2 பொருட்களை பயன்படுத்துங்கள்!!

0
179
#image_title

பனி காலத்தில் உங்கள் முகம் பளபளப்பாக இருக்க இந்த 2 பொருட்களை பயன்படுத்துங்கள்!!

தற்பொழுது பனிக்காலம் தொடங்கி விட்டதால் சருமத்தை பராமரிப்பதில் அதிக அக்கறை செலுத்தியாக வேண்டும். அதிகப்படியான பனி முகத்தில் பட்டு அவை வறண்ட சருமத்தை ஏற்படுத்தி விடும். இந்த வறண்ட சருமத்தால் முக எரிச்சல் ஏற்படும், முக அழகு குறைந்து விடும். இந்த பாதிப்பை சரி செய்ய இயற்கை வழிகளை கடைபிடித்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

*வாழைப்பழம்

*தேன்

செய்முறை…

முதலில் 1 வாழைப்பழத்தை தோல் நீக்கி கொள்ளவும். இதை மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் இதை ஒரு கிண்ணத்தில் சேர்த்து 1 தேக்கரண்டி தேன் கலந்து கொள்ளவும்.

இந்த பேஸ் பேக்கை முகத்தில் அப்ளை செய்வதற்கு முன் குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவிக் கொள்ளவும். பின்னர் காட்டன் துணி கொண்டு முகத்தை துடைத்துக் கொள்ளவும்.

அடுத்து தயார் செய்து வைத்துள்ள பேஸ் பேக்கை முகத்தில் அப்ளை செய்து 30 நிமிடங்களுக்கு பின்னர் முகத்தை கழுவிக் கொள்ளவும். இவ்வாறு வாரத்தில் 3 முறை செய்து வந்தால் பனிக்காலத்தில் முகத்தில் ஏற்படும் வறட்சி நீங்கி முகம் பளபளப்பாக மாறும்.