முகத்தில் உள்ள தழும்புகள் மறைய முகம் அழகாக இந்த ஆயிலை அங்கு யூஸ் பண்ணுங்கள்!!

Photo of author

By Divya

முகத்தில் உள்ள தழும்புகள் மறைய முகம் அழகாக இந்த ஆயிலை அங்கு யூஸ் பண்ணுங்கள்!!

முகத்தில் அடி பட்டால் அவை நாளடைவில் தழும்புகளாக மாறி விடுகிறது.இதனால் முக அழகு கெடும் சூழல் ஏற்படுகிறது.

எனவே முக அழகை கெடுக்கும் தழும்புகளை மறைய வைக்க மேஜிக் ஆயில் தயாரித்து முகத்திற்கு பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)கற்றாழை ஜெல்
2)எலுமிச்சை சாறு
3)தேங்காய் எண்ணெய்

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.பிறகு ஒரு துண்டு கற்றாழையை தோல் நீக்கி அதில் இருந்து கிடைக்கும் பிரஸ் ஜெல்லை தேங்காய் எண்ணையில் போட்டு கலந்து விடவும்.

பிறகு ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறை அதில் சேர்த்து நன்கு கலந்து விடவும்.இதை முகத்தில் உள்ள தழும்புகள் மீது பூசினால் முகத் தழும்புகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

1)தேன்
2)உருளைக்கிழங்கு

செய்முறை:-

ஒரு உருளைகிழங்கை இரண்டாக நறுக்கி பாதியளவு எடுத்துக் கொள்ளவும்.இதை தோல் நீக்கி மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.

இந்த சாற்றில் 1/4 தேக்கரண்டி தேன் சேர்த்து கலந்து முகத்தில் உள்ள தழும்புகள் மீது பூசி வந்தால் அவை சில தினங்களில் மறைந்து முகம் அழகாக மாறும்.

அதேபோல் சந்தனத்தை நீரில் குழைத்து தழும்புகள் மீது பூசி வந்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.