உடலில் உள்ள தேமல் அனைத்தும் குணமாக இதை மேனிக்கு பயன்படுத்துங்கள்!!

0
127
#image_title

உடலில் உள்ள தேமல் அனைத்தும் குணமாக இதை மேனிக்கு பயன்படுத்துங்கள்!!

சுற்றுசூழல் மாசுபாடு, ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம் உள்ளிட்ட காரணங்களால் தேமல் பாதிப்பு அதிகளவில் ஏற்படுகிறது. இவ்வாறு தோலில் வரக் கூடிய தேமலை குணமாக்க வீட்டில் சோப் தயாரித்து பயன்படுத்துங்கள்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)கற்றாழை ஜெல்
2)குப்பைமேனி இலை
3)வேப்பிலை
4)காஸ்ட்டிக் சோடா
5)கோகொனட் ஆயில்

செய்முறை:-

ஒரு மிக்ஸி ஜாரில் பிரஷ் கற்றாழை ஜெல், குப்பைமேனி இலை, வேப்பிலை போட்டு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

பிறகு இதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு கண்ணாடி கிண்ணத்தில் 1 கப் காஸ்ட்டிக் சோடா சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி ஒரு கரண்டி கொண்டு கலந்து விடவும்.

அடுத்து அரைத்த சாற்றை அதில் ஊற்றி நன்கு கலந்து விடவும். அடுத்து ஆறு கப் சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்கு கலக்கி விடவும்.

இதை அனைத்தையும் நன்கு கலந்த பிறகு ஒரு சோப் மோல்டில் ஊற்றி 8 மணி நேரத்திற்கு நிழலில் காய விட்டால் மூலிகை சோப் தயாராகி விடும். இதை சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால் தேமல் முழுமையாக குணமாகி விடும்.