மஞ்சள் பற்களை 5 நிமிடத்தில் வெண்மையாகக்கூடிய அற்புதமான வைத்தியம்!

Photo of author

By Kowsalya

என்னதான் பல் துலக்கினாலும் பற்கள் மஞ்சளாக இருக்கின்றன என்று கவலைப்படுபவர்கள் அதிகம். அதேபோல் புகையிலை,சிகரெட், பாக்கு ஆகியவை போடுவதாலும் பற்களில் மஞ்சள் படிந்து கரைகள் விடுகின்றன. இப்பொழுது ஐந்தே நிமிடத்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்கும் அற்புதமான நம் முன்னோர்கள் பயன்படுத்திய முறையினை காண்போம்.

தேவையான பொருட்கள்:

1. சீரகம்

2. உப்பு

3. தேங்காய் எண்ணெய்.

செய்முறை:

1. ஒரு இரும்பு கடாயை எடுத்து கொள்ளவும்.

2. அது இரண்டு ஸ்பூன் அளவு சீரகத்தைப் போட்டு நன்றாக வறுத்துக்கொள்ளவும்.

3. சீரகம் கருமை நிறமாக மாறும் வரை மிதமான தீயில் வைத்து வறுத்து கொள்ளவும்.

4. சீரகம் கருமையான நிறம் ஆன பிறகு மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.

5. இப்பொழுது ஒரு பௌலில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு அரைத்து வைத்த சீரகப் பொடியை எடுத்துக் கொள்ளவும்.

6. அதில் கால் டீஸ்பூன் உப்பை சேர்க்கவும்.

7. ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.

இப்பொழுது இந்த பேஸ்ட்டை நீங்கள் வாரம் 3 முறை தொடர்ந்து பல் துலக்கி வாருங்கள். அப்படி செய்து வந்தால் உங்கள் பற்களில் உள்ள கறைகள் நீங்கி வெண்மை நிறமாக மாறிவிடும்.