வெள்ளிக்கிழமை நில வாசற்படியில் இந்த பொருளை வைத்தால் பிரச்சினை தீரும்

0
163

வெள்ளிக்கிழமைகளில் வாசல்படியில் இந்த பொருளை வைக்கும் பொழுது பிரச்சினை தீர்வு நல்லதொரு தீர்வு கிடைக்கும்.

வெள்ளிக்கிழமை என்றாலே பல மாற்றங்களை நாம் வீட்டில் செய்வோம். அதாவது முதல் வாரம் கட்டிய மாவிலைகளை எடுத்து விட்டு புதிதாக மாவிலைகளை கட்டுவது. திருஷ்டிக்காக கட்டிவைத்த எலுமிச்சம் பழத்தை எடுத்து விட்டு புதிதாக கட்டுவது. பூசணிக்காயை மாற்றுவது இது போன்ற மாற்றங்களை வெள்ளிக்கிழமை அன்று நாம் செய்வோம்.

அப்படி நில வாசலில் இந்த பொருளை வைக்கும் பொழுது நில வாசலில் இருந்து எந்த ஒரு பிரச்சனையும் உள்ளே வராது.

ஆன்மீக நாளான வெள்ளிக்கிழமையன்று பல்வேறு முறைகளை செய்வதனால் வீட்டில் சுபிட்சம் ஏற்படும். அதனால் தான் வெள்ளிக்கிழமை கட்டாயம் விளக்கை ஏற்றி வைக்க வேண்டும்.

அப்படி வெள்ளிக்கிழமை விளக்கை ஏற்றி மாலை பூஜையை முடித்துவிட்டு இரண்டு எலுமிச்சை பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். எந்த ஒரு கெட்ட சக்தியாக இருந்தாலும் வீட்டிற்குள்ளேயே அண்ட வைக்காமல் காப்பது எலுமிச்சை பழம் தான்.

அதனால்தான் எலுமிச்சை பழம், கரித்துண்டு, மிளகாய் ஆகியவற்றை வீட்டு வாசலில் தொங்க விடும் பொழுது எந்த பிரச்சனையும் வீட்டிற்குள் அண்டாது.

இப்பொழுது இரண்டு எலுமிச்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதை நான்கு பாகங்களாக பிரித்துக் கொள்ளுங்கள். அது துண்டாக பிரிந்து விடக்கூடாது. தாமரைபோல் மலர்ந்திருக்க வேண்டும். அதற்கு உள்ளே கல் உப்பை போட்டுக் கொள்ளுங்கள்.

அதேபோல் ஒவ்வொரு எலுமிச்சை பழத்திலும் இரண்டு மிளகு போட்டுக் கொள்ளுங்கள்.

இதை நில வாசற்படியில் இருபுறமும் வைத்துவிட்டால் அந்த வீட்டிற்குள் எந்த ஒரு பிரச்சினையும் உள்ளே நுழையாது. எந்த விதமான கண் திருஷ்டியும் வராது. எந்தவிதமான தீய சக்திகள் அண்டாது.

அதே போல் எலுமிச்சை பழத்தை வைக்கும்போது ஒரு சிறு தட்டு வைத்து அதன் மேல் எலுமிச்சை பழத்தை வைப்பது மிக நல்லது.

மற்றவர்களின் கண்களுக்குத் தெரியும் படி அதை வைத்தோமே ஆனால் அவர்களது கெட்ட சக்திகளை அதை எடுத்து விடும்.

அதே போல் அடுத்த வாரம் வியாழக்கிழமை மாலையில் இதனை எடுத்து கால் படாத அல்லது ஓடும் தண்ணீரில் போட்டு விடலாம். இதேபோல் அடுத்த வெள்ளிக்கிழமை இந்த மாதிரி செய்து நில வாசற் படியில் வைக்கலாம். இதுபோன்று தொடர்ந்து நீங்கள் செய்து வரும் பொழுது எந்த ஒரு தீய சக்தி ஆகட்டும், பிரச்சனைகள் ஆகட்டும், கண் திருஷ்டிகள் ஆகட்டும், எந்த பிரச்சனையும் நம்மை ஒன்றும் செய்யாது.