தொட்டாற் சிணுங்கியின் மருத்துவ குறிப்பு -தினம் ஒரு மூலிகை

Photo of author

By Kowsalya

தொட்டால் சிணுங்கி அனைவரும் பார்த்திருப்போம் தொட்டால் சுருங்கி விடும் அந்த இலைக்கு மிகவும் மகத்தான மருத்துவக் பயன்பாடுகள் உள்ளன.
தொட்டாற்சுருங்கி ,தொட்டா வாடி இலச்சகி, நமஸ்காரி ,காமவர்த்தினி என இதற்குப் பல பெயர்கள் உள்ளன.
தொட்டால் சிணுங்கி புண்களுக்கு ஒரு அருமருந்தாக பயன்படுகிறது
புண்கள் மறைய:
தொட்டால் சிணுங்கி இலைகளை பறித்து சாறு எடுத்து அந்த சாற்றை புண்கள் மீது தடவி அதன் மேல் ஒரு வெற்றிலையை வைத்து கட்டிவர குழிப்புன் விரைவில் மறையும்.
வயிற்றுக் கடுப்பு குறைய:
தொட்டால் சினுங்கி இலைகளை பறித்து  அரைத்து தயிரில் கலந்து குடித்து வர வயிற்றுக் கடுப்பு குறையும்.
மூலநோய் குறைய:
மூலநோய் பெரும்பாலானோருக்கு பலவித பிரச்சினைகளை தந்து வருகிறது தொட்டால் சிணுங்கி இலை ,நொச்சி இலை, எட்டி மர விதை, படிகாரம்,வேப்ப எண்ணெய் ,ஆமணக்கு எண்ணெய், தேன் ஆகியவற்றை சேர்த்து மெழுகு போல் அரைத்து களிம்பு போல் குதத்தில் பற்றுபோட மூலநோய் விரைவில் ஆறும்.
இடுப்பு வலி குறைய:
தொட்டால் சிணுங்கி இலைகளை எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை இடுப்பில் ஒத்தடம் கொடுக்க வலி மறையும்.
தேமல் குறைய:
தொட்டால் சிணுங்கி இலைகளை தேமல் உள்ள இடத்தில் பூசி வர தேமல் மறையும்.
சர்க்கரை நோய் குறைய :
தொட்டால் சிணுங்கி இலையையும் வேரையும் எடுத்து காயவைத்து பொடி செய்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர சர்க்கரை நோய் விரைவில் குணமாகும்.
உடல் குளிர்ச்சி பெற:
தொட்டால் சிணுங்கி இலைகளை எடுத்து அரைத்து மோரில் கலந்து மூன்று நாட்கள் குடித்து வர உடல்குளிர்ச்சி பெறும்.
சிறுநீர் கடுகடுப்பு மறைய:
தொட்டால் சிணுங்கி இலைகளை எடுத்து அரைத்து 10 கிராம் அளவில் தயிருடன் கலந்து குடித்துவர சிறுநீர் கடுகடுப்பு குறையும்.
வாதம் குறைய:
தொட்டால் சிணுங்கி இலைகளை எடுத்து களி மண்ணுடன் சேர்த்து வாதம் உள்ள இடத்தில் பற்றிட விரைவில் வாதம் குறையும்.

இவ்வாறு பல நன்மைகள் மற்றும் மருத்துவ பயன்பாடுகள் தொட்டால் சினிங்கி மூலிகையில் உள்ளது. அனைவரும் இதை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.