உஷாரய்யா உஷார் பொதுமக்களுக்கு காவல்துறையின் கடும் எச்சரிக்கை! அதிகரித்து வரும் புதிய வகை வாட்ஸப் மோசடி!!
புதிய வகை வாட்ஸப் மோசடி தற்போது அதிகரித்து வருவதால் பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பில் கவனமாக இருக்குமாறு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
செல்போன் என்ற ஒரே ஒரு பொருளின் மூலம் உலகமே நம் கைக்குள் அடங்கி விட்டது. அதிலும் வளர்ந்து வரும் பல்வேறு சமூக வலைத்தளங்களால் மக்கள் ஏராளமான நன்மைகளை பெற்று பயனடைந்து வருகின்றனர். எந்தளவு நன்மைகள் உள்ளனவோ! அதே அளவு தீமைகளும் சமூக வலைதளங்களில் ஏராளமாக உள்ளன.
அதிலும் வாட்ஸ் அப் என்ற சமூக வலைத்தளம் மூலம் மக்கள் பல்வேறு நன்மைகளை பெறுகின்றனர் . உலகில் ஏராளமான மக்கள் இந்த செயலியை பயன்படுத்துகின்றனர். வாட்ஸ் அப்பில் பல்வேறு வகையான செயலிகள் உள்ளன. பயனாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு இந்த செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பிங்க் நிற whatsapp செயலி தற்போது மக்களிடையே பரவலாக பகிரப்பட்டு வருகின்றது. அதாவது நமது நார்மலான வாட்சப் செயலியில் ஒரு லிங்க் அனுப்பப்பட்டு அதில் பிங்க் நிற வாட்ஸ் அப்பை பதிவிறக்கம் செய்யுமாறு கூறப்படுகிறது. பயனாளர்களும் அதனை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்யும்பொழுது பயனாளரின் தனிப்பட்ட தகவல்கள் இந்த செயலியின் மூலம் திருடப்பட்டு வருகின்றன.
மேலும் இந்த செயலியின் மூலம் மோசடி கும்பல் வங்கி கணக்கில் உள்ள பணத்தையும் கொள்ளையடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து மும்பை காவல்துறை இதுகுறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதேபோல் ஒடிசா மாநிலத்திலும் சைபர் கிரைம் பாதுகாப்பு நிபுணர்கள் பிங்க் நிற வாட்ஸ்அப் மூலம் பல்வேறு மோசடிகள் அரங்கேறி வருகின்றன. எனவே அந்த செயலியை உங்கள் மொபைல் போனிலிருந்து முதலில் நீக்க வேண்டும். மேலும் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஏதேனும் லிங்க் வந்தால் அதனை கிளிக் செய்ய வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.