மீடியாவில் உத்தமன் வேஷம்!! ஆனால் நிஜத்தில் 15 பெண்களை ஏமாற்றி பணம் பறித்த விசிக விக்ரமன் அம்பலபடுத்திய காதலி மௌனம் காக்கும் திருமா!!

Photo of author

By Amutha

மீடியாவில் உத்தமன் வேஷம்!! ஆனால் நிஜத்தில் 15 பெண்களை ஏமாற்றி பணம் பறித்த விசிக விக்ரமன் அம்பலபடுத்திய காதலி மௌனம் காக்கும் திருமா!!

சென்னை விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவரும் பிக் பாஸ் பிரபலமான ஆர். விக்ரமன் மீது கிருபா முனுசாமி என்ற வழக்கறிஞர் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோ பிக் பாஸ். இதற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடந்த ஆறு சீசர்களை சீசன்களை முடித்த இந்த நிகழ்ச்சியில் விரைவில் ஏழாவது சீசன் வர இருக்கிறது. இந்த சூழ்நிலையில் இதில் பிரபலமடைந்த ஒருவரை பற்றி வெளிவந்த தகவல் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6-இல் கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தவர் விக்ரமன். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலும் உள்ளார். இவரது கண்ணியமும் மற்றும் நேர்மையான குணத்தால் டைட்டிலை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவை அனைத்தும் பொய் என்று நிரூபிக்கும் வகையில் தற்போது பரபரப்பு புகார் ஒன்று கிளம்பி உள்ளது.

கிருபா முனுசாமி என்ற பெண் வழக்கறிஞர் விக்ரமன் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாகவும் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகவும் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்தார். மேலும் அவரிடம் 12 லட்சம் வரை விக்ரமன் பணம் ஆகிய ஏமாற்றியுள்ளார்.

இது பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில் அவர் விக்கிரமனுடன் இணைந்திருக்கும் போட்டோ மற்றும் அவர்கள் இருவரும் செய்து கொண்ட மெசேஜ் ஸ்கிரீன் ஷாட் ஆகியவற்றையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் தன்னை மட்டும் இல்லாத இதுவரை 15 க்கும் மேற்பட்ட பெண்களை விக்ரமன் ஏமாற்றியுள்ளார் என்று தெரிவித்தார்.

சுமார் இரண்டு வருட உறவுக்கு பின்னர் அவருக்கு உதவுவதை நிறுத்தி விட்டேன் எனக் கூறிய கிருபா கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது தனது நம்பரை பிளாக் செய்ததாக தெரிவித்தார். மேலும் பிக்பாஸில் சேர்வதற்கு முன்பு தன்னிடம் மன்னிப்பு கேட்டதால் அது பற்றி தான் விவாதிக்காமல் விட்டதாக தெரிவித்தார்.

பிக்பாஸ் முடிந்த பிறகு எங்களது காதல் தொடர்ந்தது. அப்போது என்னை துன்புறுத்தி மன்னிப்பு கேட்டு என்னை பயன்படுத்திக் கொண்டே இருந்தார் அதோடு தன்னுடைய மேனேஜர் என்று ஒரு பெண்ணை சொல்லிவிட்டு அவரிடம் இவர் நெருக்கமாக இருந்து என்னை ஏமாற்றி வந்துள்ளார்.

அதற்கடுத்ததாக அவர் விசிக கட்சியில் சேர போவதாக கூறி எனது ஆதரவை கேட்டார்.  இதனால் நான் அவருக்கு எதிராக 20 பக்க புகாரை கட்சியிடம் கொடுத்தேன். தொடக்க விசாரணை மற்றும் முதன்மை சாட்சியத்தின் அடிப்படையில் கட்சித் தலைவர் திருமாவளவன் 2 வெளிஉறுப்பினர்களை  கொண்ட 5 பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரிக்க சொன்னார்.

20 நாட்களுக்குள் விசாரித்து அதன் அறிக்கையை சமர்ப்பிக்க சொன்னார். காதலித்து ஏமாற்றுவது, முறைகேடு, நிதி மோசடி, ஆகியவற்றை நிரூபிக்கும் ஆவண ஆதாரங்கள்,உள்பட  8 சாட்சி ஆதாரங்களை இதில் நான் சமர்ப்பித்தேன்.

இந்த குழு அறிக்கை சமர்ப்பிக்க 40 நாட்கள் எடுத்துக் கொண்டது. ஆனால் அறிக்கை நகல் இதுவரை  எனக்கு வழங்கப்படவில்லை. நான் ஒருமாதமாக முயற்சிசெய்து பார்த்தேன்.ஆனால்  குழு உறுப்பினர்கள் என்னிடம் அறிக்கையை கொடுக்கவில்லை. அலுவலக பணியாளர்கள் அதைப்பற்றி பேசவும், அறிக்கையை பகிர்ந்து கொள்ளவும், பயப்படுகிறார்கள் என்று கிருபா தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது இந்த  நிகழ்வு  சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெண்கள் மீது மரியாதை கொண்டவராகவே விக்ரமன் வலம் வந்தார். அவரது கண்ணியமான நடத்தை ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயரை தந்துள்ளது.

ஆனால் தற்போது வெளிவந்த புகாரால் அவரது உண்மையான முகம் வெட்ட வெளிச்சமாகி  இருக்கிறது. ஊருக்கு முன் தவறாக வேஷம் போட்ட விக்ரமனின் முகத்திரையை அவரது காதலியே  தற்போது வெளிச்சத்துக்கு முன் கொண்டு வந்து கிழித்துள்ளார். ஆனால் சில ரசிகர்கள் இதனை நம்ப மறுத்து மிக்கமனுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.