காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்! ஆட்டத்தை ஆரம்பித்த எடப்பாடி!!
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் இடையே நடைபெற்று வந்த பொதுகுழு சம்பந்தமான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் எடப்பாடிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய போதும், தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்காமல் இருந்து வந்தது.
இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பினை சுட்டி காட்டி, தனக்கு பொது செயலாளருக்கானா அங்கிகாரம் மற்றும் கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலையை தனக்கு ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம் பத்து நாட்களுக்குள் இந்த வழக்கு பற்றி முடிவினை அறிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் எடப்பாடியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கிகரித்தும் இரட்டை இலை சின்னத்தையும் ஒதுக்கி எடப்பாடிக்கு ஆதரவாக தனது முடிவினை அறிவித்தது.
எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கிகரித்து விட்டதால், ஓபிஎஸ் செய்வதறியாது திகைத்து நிற்பதாக இபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவித்த நிலையில், ஓபிஎஸ்யின் நம்பிக்கைக்குரிய மகளிரணி நிர்வாகிகளில் ஒருவரான ஜெயதேவி நேற்று இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
ஓபிஎஸ் கூடாரத்தில் இருந்து முக்கிய பெண் நிர்வாகி ஒருவர் இபிஎஸ் கூடாரத்திற்கு வந்திருப்பதை தொடர்ந்து மற்ற நிர்வாகிகளும் ஓபிஎஸ் விட்டு வெளியேறி இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைவார்கள் என கூறப்படுகிறது. இதனால் மெல்ல மெல்ல ஓபிஎஸ் கூடாரம் காலியாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.