12 மணிநேர வேலை! புதிய சட்டத்திற்கு விஜயகாந்த் கண்டனம்

0
137
#image_title
12 மணிநேர வேலை! புதிய சட்டத்திற்கு விஜயகாந்த் கண்டனம்
தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களின் வேலைநேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா, சட்டப்பேரவையில் பல எதிர்ப்புக்கிடையே நேற்று முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
தனியார் நிறுவனங்களில் வேலைநேரத்தை 12 மணிநேரமாக உயர்த்தி, தொழிலாளர் சட்ட விதிகளில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்தது. தொழிலாளர்கள் தினசரி 12 மணி நேரம் வேலை செய்வதற்கு வழிவகை செய்யும் சட்ட மசோதாவுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பிட்ட தொழிற்சாலைகளுக்கு மட்டுமே நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன், அரசின் பரிசீலனைக்கு பின்பே பணி நேரம் குறித்த விதிவிலக்கு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
வாரத்தில் 4 நாட்கள் 12 மணி நேரம் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மீதமுள்ள 3 நாட்களுக்கு முழு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த புதிய சட்டம் குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்ற வழி செய்யும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
பல ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் பணி நேரத்தை தற்போது நீட்டிக்க வேண்டிய அவசியம் என்ன. 12 மணி நேரம் பணி என்பது ஒட்டு மொத்த தொழிலாளர்களுக்கு வேலை பளுவை அதிகரிப்பதோடு, அவர்களுக்கு மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும்.
மேலும் தொழிலாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையே குழப்பத்தை உண்டாக்கும். எனவே 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்றும் சட்ட மசோதாவை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் பழைய நடைமுறையே தொடர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.