18+ களுக்கு தொடங்கிய தடுப்பூசி திருவிழா! அதிகரிக்கும் முன்பதிவு!
சென்ற ஆண்டு சீனாவில் வுஹான் பகுதியி தொடங்கிய கொரோனா தொற்று தற்போது உலகெங்கும் பரவி மக்களை காவு வாங்கி வருகிறது.பெரியவர்கள் முதல் சிறியவர் என அனைவரையும் தாக்கி வருகிறது.அதனைத்தொடர்ந்து இத்தொற்று எவ்விதத்தில் பரவுவுகிறது என்பதை ஆராயிந்து கண்டுபிடிக்கவே வெகு நாட்கள் ஆகிவிட்டது.அதன்பின் தொற்று அதிகமாக பரவ ஆரம்பித்ததால் சென்ற ஆண்டு பல நாடுகளில் ஊரடங்கை அமல்படுத்தினர்.அந்நாடுகளில் இந்தியாவும் ஒன்று.இந்தியாவில் அதிக அளவு கொரோனா தொற்று காணப்பட்டதால் 7 மாதங்களுக்கு மேல் முழு ஊரடங்கை அமல்படுத்தினர்.
அதன்பின் மக்கள் கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என நரேந்திரமோடி கூறினார்.சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே செல்ல ஆரம்பித்தனர்.அதன்பின் ரெம்டிசிவர் கொரோனா தடுப்பூசி கொண்டுவரப்பட்டது.மக்கள் அத்தடுப்பூசியால் பின்விளைவுகள் ஏற்படும் என கூறி போட முன்வரவில்லை.ஆனால் அத்தடுப்பூசி போட்டுக்கொள்ளும் படி அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.அந்தவகையில் தமிழ் புத்தாண்டு அன்று கொரோனா தடுப்பூசி திருவிழா நடைபெற்றது.இதில 45- வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொளும்படி வலியுறுத்தினர்.அதனையடுத்து மே 1-ம் தேதியிலிருந்து 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.இதற்கான முன் பதிவு இன்று மாலையிலிருந்து தொடங்கியது.
இந்த முன் பதிவானது போன் மூலம் செய்யமுடியும்.அதாவது cowin.gov.in என்ற தளத்திலோ அல்லது ஆரோக்கிய சேது என்ற செயலிலோ முன்பதிவு செய்யலாம்.அதிகப்படியானோர் முன் பதிவு செய்து வருவதால் ஒடிபி எண் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.முன் பதிவு செய்பவர்களுக்கு அவர்கள் எந்த தேதியில் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்ற செய்தி அவர்களின் எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் மூலம் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என கூறியுள்ளனர்.