தடுப்பூசி விரைவானதாகவும், நியாயமானதாகவும் இருக்க வேண்டும்

Photo of author

By Parthipan K

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவும், பிரேசிலும் ஆகும். அமெரிக்காவில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியது. அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி வருகிறது. இந்த தொற்றுக்கான மருந்தை கண்டுபிடிக்க அனைத்து நாடுகளும் தீவிர முயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையில் ரஷ்யா இதற்கான மருந்தை முதன் முதலில் கண்டுபிடித்தது.

மேலும் இந்த மருந்தை 100 கோடிக்கும் மேல் ஆர்டர் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனம் எந்த ஒரு பாதுகாப்பு மற்றும் பயனுள்ள தொற்றுநோய் தடுப்பூசி, உலகளாவிய பொது நன்மையாக இருக்கும். மேலும், உலகமெங்கும் இது போன்ற ஒவ்வொரு தடுப்பூசியும் விரைவானதாகவும், நியாயமானதாகவும், எல்லோரும் நாடுவதற்கு சம வாய்ப்பினை தருவதாகவும் அமைய வேண்டும் என்று கூறியுள்ளது.