வந்தது குழந்தைகளுக்கான தடுப்பூசி! இன்று முதல் இந்நாட்டில் தொடக்கம்!
கொரோனா தொற்றானது உலக நாடுகள் அனைத்தையும் பெருமளவு பாதித்தது. அத்தொற்றிலிருந்து பொதுமக்கள் தற்பொழுது தான் மீண்டு வந்து உள்ளனர்.அவ்வாறு மீண்டு வந்தாலும் இன்றளவும் சிறிதளவு அதன் தாக்கம் இருந்து கொண்டே உள்ளது. இதைப்போல உலக மக்கள் அனைவரும் கரோனோ தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் வந்துள்ளனர். இன்றளவும் குழந்தைகளுக்கு என்று கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கவில்லை. அவர்களுக்கான தடுப்பூசிகான ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து வண்ணமாகவே உள்ளது.இதற்கு முன் அம்மை ,மலேரியா போன்ற தொற்று நோய்கள் உருவாகியது. அதற்கென்று தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்கள் அனைவருக்கும் செலுத்தி வந்தனர்.
குறிப்பாக குழந்தை பிறந்த மூன்று மாதத்திற்குள்ளேயே அவர்களுக்கு அம்மை தடுப்பூசி செலுத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் மலேரியா வருவதை தடுப்பதற்கான குழந்தைகளுக்கென்று தடுப்பூசி ஏதும் கண்டு பிடிக்கப்படவில்லை. மலேரியா காய்ச்சலை தடுப்பதற்காக மாஸ்குறிக்ஸ் என்ற தடுப்பூசியை கடந்த 1980 இல் கண்டுபிடித்தனர். ஆனால் அந்த தடுப்பூசியின் செயல்திறன் ஆனது மிகவும் குறைவாக காணப்பட்டது. அதனால் தடுப்பூசி யாருக்கும் செலுத்தப்படவில்லை.அதுமட்டுமின்றி அந்த தடுப்பூசி அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லவும் யாரும் முயற்சிக்கவில்லை. 1980 அடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு தான் கானா, கென்யா ஆகிய நாடுகளில் 8 லட்சத்திற்கும் மேலாக சிறார்களுக்கு மலேரிய தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அவ்வாறு செலுத்தி ஆராய்ச்சி செய்தனர். ஆராய்ச்சியானது அதனையடுத்து ஆராய்ச்சி மூலம் கிடைத்த முடிவுகளை கொண்டு தடுப்பூசி நடைமுறைக்கு கொண்டுவர உலக சுகாதார அமைப்பு கடந்த புதன்கிழமை அன்று ஒப்புதல் அளித்தது. அந்தவகையில் முதல்முறையாக உலகநாடுகளின் ஆப்பிரிக்காவை சேர்ந்த சிறுவர்களுக்கு மலேரிய தடுப்பூசி செலுத்த உள்ளனர்.அதுமட்டுமின்றி இவ்வாறு செலுத்துவது இது வரலாற்று சிறப்புமிக்க தருணம் என உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கூறியுள்ளார்.