கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்த இந்தியா! இனிமேல் இறப்பு விகிதம் குறையும்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புபானது நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமேயுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலைக் கடுப்படுத்த மத்திய அரசு ஏற்கனவே பிறப்பித்திருந்த ஊரடங்கை நீட்டித்து அறிவித்துள்ளது. இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த ஊரடங்கு வரும் மே 3 ஆம் தேதி வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்படும் இறப்பு விகிதங்களை குறைக்கும் வகையில் புதிய தடுப்பூசி ஒன்று இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 27 ஆயிரத்தை கடந்து விட்டது. இந்த கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்தோர் எண்ணிக்கையானது 872 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்த பாதிப்பிலிருந்து மக்களை காப்பற்ற சமூக விலகல் தான் முதன்மையான வழி என்று உணர்ந்த மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருந்தது.இதே வேளையில் இந்த வைரசை குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்கும் பணிகளும் தொடர்ந்து மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக தற்போது இந்த கொரோனாவைரஸ் பாதிப்பினால் ஏற்படும் உயிர் இழப்புகளை குறைக்க புதிய தடுப்பூசி ஒன்றை சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையம் கண்டுபிடித்துள்ளது .
இது குறித்து சண்டிகர் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன செய்தி தொடர்பாளர் கூறியிருப்பதாவது: அண்மையில் நடத்தப்பட்ட சோதனையில், இந்த தடுப்பூசியானது ஐசியூவில் உள்ள கொரோனா நோயாளிகளின் இறப்பை குறைப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலமாக நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஏற்படும் இறப்பு விகிதம் குறையும் என்று தெரிவித்துள்ளார்.