தமிழில் உருவாகும் முன்பே ஹிந்திக்கு விற்பனையான வாடிவாசல்!! சூர்யாவுக்கு இந்தியில அவ்வளவு மவுசுசா!!

Photo of author

By CineDesk

தமிழில் உருவாகும் முன்பே ஹிந்திக்கு விற்பனையான வாடிவாசல்!! சூர்யாவுக்கு இந்தியில அவ்வளவு மவுசுசா!!

CineDesk

Vadivasal sold to Hindi before it was made in Tamil !! Surya has so much fun in Hindi !!

தமிழில் உருவாகும் முன்பே ஹிந்திக்கு விற்பனையான வாடிவாசல்!! சூர்யாவுக்கு இந்தியில அவ்வளவு மவுசுசா!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்குபவர் நடிகர் சூர்யா. இவர் தமிழில் முப்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அண்மையில் இவர் நடிப்பில் உருவான சூரரை போற்று திரைப்படம் தமிழ் திரை உலகில் பெரும் சாதனையைப் படைத்தது. மேலும் இந்த திரைப்படம் கொரோனா பரவல் காரணமாக ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. மேலும் இந்த படத்திற்கு ரசிகர்களிடமிருந்து பெரும் ஆதரவை பெற்றது.

இந்நிலையில் சூர்யாவின் 40 வது படமான வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடி வாசல் திரைப்படம். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது  நடைபெற்று வருகிறது. தானு தயாரிப்பில் உருவாகும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. அதன்படியே இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் ஆதரவை பெற்றது. ஆரம்பகட்ட பணிகள் அனைத்தும் நடைபெற்று வருகிறது என படக்குழு கூறியுள்ளது. இந்த நிலையில் இந்தப் படம் ஹிந்தியிலும் உருவாக உள்ளதாம்.

மேலும் இப்படத்தின் ஹிந்தி டிரைலர் இப்போதே விற்கப்பட்டுள்ளது. கோல்ட் மைன்ஸ்  என்னும் நிர்வாணம் இந்தப் படத்தை ஹிந்தியில் டப்பிங் செய்ய இப்பொழுதே வாங்கி விட்டார்களாம். மேலும் இந்த கோல்ட் மைன்ஸ் நிறுவனம் தமிழில் நடித்த பல முன்னணி நடிகர்களின் படம் பலவற்றின் உரிமையை கைப்பற்றி உள்ளது என கூறப்படுகிறது. இதனால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு பெருமளவில் உள்ளது. மிகவும் ஆர்வத்துடன் சூர்யா ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.