‘இதை சாப்பிட்டாலே எந்த நோயும் வராது’!! வைட்டமின் ‘c’ உள்ள சத்தான பழம்!!

0
90

ஆப்பிள் பழத்தில் இரும்புச்சத்து மற்றும் பாஸ்பரஸ் உப்பு ஆகியன அதிகமாக உள்ளன. மேலும், தினமும் பாலுடன் ஒரு ஆப்பிளை எடுத்துக் கொண்டால் ரத்த சோகை நீக்கி அது உடலை பாதுகாக்கும். மேலும், உடலை புத்துணர்ச்சியுடன் வைக்கும். உடலை பாதுகாக்கும் பழங்களில் ஆப்பிள் ஆனது முதல் இடத்தை பிடித்து உள்ளது.

அதனை அடுத்த இடங்களில் திராட்சை மற்றும் வாழைப்பழம், அத்திப்பழம் போன்றவை இருக்கின்றன. மேலும், தினம் இரண்டு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள பெக்டின் என்னும் நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை அனைத்தையும் வேகமாக கரைத்து விடும். ஆப்பிள் பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் ரத்தத்தில் வேகமாக கலந்து அதில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

மேலும், ஆப்பிளில் உள்ள க்யூயர்சிடின் என்னும் சத்து சுவாச செல்களை மிக வலிமை மிக்கதாக ஆக்குகிறது. இதன் காரணமாக நுரையீரலுக்கு தேவையான ரத்த ஓட்டத்தை சீராக வைக்க முடிகிறது. ஆப்பிளில் உள்ள யூரிக் அமிலம் வாதம் மற்றும் மூட்டு நோய்களின் வலிகளைப் போக்குகிறது. மேலும், வாத நோயாளிகள் சாப்பிட வாதநோய் சரியாகும். ஆப்பிளை அவித்து சூட்டுடன் வலி உள்ள இடத்தில் கட்டினால் வலியானது பறந்து போகும் கட்டிகளும் சீக்கிரம் குணமடையும்.

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் ப்ரீராடிக்கல் திரவத்தை அது கட்டுப்படுத்தும். மேலும், சத்தான வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இதன் காரணமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். மேலும் உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கும், புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆப்பிளில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட் கண் புரை நோய் ஏற்படுவதை தடுக்கிறது.

மேலும், ஆப்பிளை தினமும் உண்டு வந்தால் கண் நன்றாக தெரியும்.மூட்டுவலி போன்ற கால் வலிகளையும் குணப்படுத்தும். ஆப்பிளில் அதிக முக்கியமான சத்துக்கள் உள்ளன.

author avatar
Jayachithra