சென்னையில் கடந்த நாலாம் தேதி மிக்ஜாம் என்ற புயல் சென்னையே ஆட்டி வைத்தது அனைவருக்கும் தெரியும். அப்படி அந்த புயலின் பல மக்கள் பாதிக்கப்பட்டனர். மக்கள் மட்டுமின்றி அடித்த புயலின் காரணமாக பல்வேறு இடங்களில் ஏகப்பட்ட மரங்கள் சாய்ந்து விழுந்தன.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பல இடங்களில் மரம் சாய்ந்து விழுந்தது. அதனால் மரம் நடுவிழா இன்று நடைபெற்றது. அதில் ஏகப்பட்ட பேர் கலந்து கொண்டுள்ளனர். அமைச்சர் மா சுப்பிரமணியன், வடிவேலு சுந்தர்ராஜன் ஆகியோர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு வெள்ள நிவாரண நிதியை மக்களுக்கு வழங்குவதில் மிகவும் நன்றாக செயல்பட்டு வருகிறது என்று கருத்துக்களை அவர் பதிவு செய்துள்ளார். எதிர்க்கட்சிகள் மற்றும் ஆயிரம் அமைச்சர்கள் குறை கூறிக் கொண்டே தான் இருப்பார்கள். கருணாநிதி பெறாத விமர்சனமா? என்று செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அரசு தன் கடமையை தான் செய்கிறது என்று கூறியுள்ளார்.
இதை பார்த்த நெட்டிசன்கள் இவருக்கு எந்த நேரத்தில் எதை பேசுவது என்றே தெரியாது என்று கமெண்ட்களை சொல்லி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி செய்தியாளர்கள் வடிவேலுவிடம் மாரி செல்வராஜை பற்றி கேட்ட பொழுது, அவனுடைய ஊர் அதில் எங்கு குழி இருக்கும்? எங்கு பள்ளம் இருக்கும்? என்று அவருக்கு தான் தெரியும் அவர் ஒரு டைரக்டராக அங்கே செல்லவில்லை. ஒரு மனிதனாக அங்கே சென்று இருக்கிறார் அவர் என்ன அமெரிக்காவில் இருந்தா வந்திருக்கிறார்? அவர் ஊருக்கு அவர் செய்கிறார் இதனால் யார் யாருக்கு என்ன பிரச்சனை என்று பேசியுள்ளார்.