அடுத்து சிறைக்கு செல்ல போகும் 3 அமைச்சர்கள் இவர்கள் தான்.. லிஸ்ட் போட்ட அண்ணாமலை!

0
179
#image_title

அடுத்து சிறைக்கு செல்ல போகும் 3 அமைச்சர்கள் இவர்கள் தான்.. லிஸ்ட் போட்ட அண்ணாமலை!

கடந்த ஜூன் மாதம் பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் ஜாமீன் கிடைக்காமல் இன்று வரை புழல் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். இவருக்கு அடுத்து அமைச்சர் பொன்முடி அவர்களுக்கு சிறை கதவு திறக்கப்பட்டு இருக்கிறது. 1996 மற்றும் 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் அமைச்சர் பதவி வகித்த பொன்முடி மக்கள் பணத்தில் ஊழல் செய்து அன்றைய கணக்குப்படி சுமார் 1.36 கோடி வரை சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு பிரிவு தொடர்ந்த வழக்கிற்கு இன்று தீர்ப்பு கிடைக்கப்பெற்று இருக்கிறது.

பொன்முடி அவர்கள் ஊழல் செய்தது நிரூபணமானதால் அவரை குற்றவாளி என்று நீதிமன்றம் தெரிவித்தது. ஊழல் குற்றத்திற்காக அவருக்கும் அவரது மனைவிக்கும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டை மற்றும் தலா 25 லட்சம் அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இதனால் பொன்முடி எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர் பதவியை இழந்து இருக்கிறார்.

முதலில் செந்தில் பாலாஜி அடுத்து பொன்முடி என்று ஊழல் அமைச்சர்கள் ஒவ்வொருவராக சிறை சென்று இருப்பதால் திமுக அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலக்கத்தில் இருக்கின்றனர்.

அடுத்து யார் சிறை செல்ல போகிறோமோ என்று அஞ்சி வரும் அமைச்சர்களுக்கு பயத்தை காட்டும் விதமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் புதிதாக லிஸ்ட் ஒன்றை வெளிட்டு இருக்கிறார்.

அதாவது ஊழல் அமைச்சர்களில் அடுத்து சிக்கி சிறை செல்ல போகும் அமைச்சர்கள் குறித்து உறுதியாக சொல்லி இருக்கிறார். ஏற்கனவே கைத்தறி துறை அமைச்சர் காந்தி அவர்கள் 1 1/4 ஏக்கரில் 130 கோடி மதிப்பீட்டில் பிரமாண்ட பங்களா கட்டி வரும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது. அதற்கு முன் நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன் அவர்கள் மணல் கொள்ளை மூலம் சுமார் 60 ஆயிரம் கோடி வரை சம்பாதித்து இருக்கிறார் என்று திமுகவின் முக்கிய புள்ளி ஒருவர் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இப்படி அமைச்சர்களின் வண்டவாளம் தண்டவாளம் ஏறிக்கொண்டு இருக்கும் நிலையில் பொன்முடிக்கு அடுத்து சிறை செல்ல போகும் அமைச்சர்கள் இவர்கள் தான் என்று தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் என்று லிஸ்ட் போட்டு தெரிவித்து இருக்கும் அவர் இவர்களுக்கு சொந்தமான இடங்களில் விரைவில் அமலத்துறை துறை சோதனை நடைபெறும் என்றும் தெரிவித்து இருக்கிறார். இந்நிலையில் அண்ணாமலை அவர்களின் இந்த பேச்சால் திமுக அமைச்சர்கள் பீதியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபட்டு வருகிறது.