பெரும்பாலான பெண்கள் அந்தரங்க பகுதியில் ஈஸ்ட் தொற்று பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர்.யோனி துவாரத்தில் எரிச்சல்,அரிப்பு மற்றும் வலி உணர்வு,அதிகபடியான வெள்ளைப்படுதல் மற்றும் யோனி துர்நாற்றம் போன்றவை யோனி ஈஸ்ட் தொற்று பாதிப்புகளாகும்.
யோனி ஈஸ்ட் தொற்று என்பது ஒரு வகை பூஞ்சையின் வளர்ச்சியால் உண்டாகக் கூடியவை ஆகும்.பாலியல் செயல்பாடுகளில் அதிகம் ஈடுபடுவது,யோனி பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் இருப்பது போன்ற காரணங்களால் இந்த நோய் தொற்று உருவாகிறது.
யோனி ஈஸ்ட் தொற்றுக்கான அறிகுறிகள்:
1)யோனி சிவந்து போதல்
2)யோனி சுவர் வெடிப்பு
3)யோனி வீக்கம்
4)சிறுநீர் கழிக்கும் போது அதிகப்படியான வலி மற்றும் எரிச்சல் உணர்வு ஏற்படுதல்
5)யோனி அரிப்பு
6)யோனியில் திரவம் வெளியேறுதல்
யோனி பகுதியில் ஏற்பட்டுள்ள தொற்றை பொறுத்து அதற்கு சிகிச்சை வழங்கப்படுகிறது.உங்களுக்கு ஈஸ்ட் தொற்று அடிக்கடி ஏற்பட்டால் அதற்கு உரிய மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்வது அவசியமாகும்.
யோனி பகுதியில் இரசாயனம் நிறைந்த சோப் மற்றும் திரவங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.சுத்தமான தண்ணீர் கொண்டு யோனியை க்ளீன் செய்து பராமரிக்க வேண்டும்.சிறுநீர் கழித்த பிறகு பிறப்புறுப்பு பகுதியை சுத்தப்படுத்த வேண்டும்.உடலுறவில் ஈடுபட்ட பின்னர் யோனி பகுதியை சுத்தம் செய்ய வேண்டும்.உணவுப் பழக்கத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.
மாதவிடாய் காலங்களில் அந்தரங்க பகுதியில் தொற்றுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.மாதவிடாய் காலங்களில் நாப்கினை அடிக்கடி மாற்ற வேண்டும்.நறுமணமிக்க திரவியத்தை பிறப்பு பகுதியில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.