வந்தே பாரத் ரயிலால் அலரும் பயணிகள்!!தொடரும் கல்வீச்சு கண்ணாடி உடைப்பு!

Photo of author

By Parthipan K

வந்தே பாரத் ரயிலால் அலரும் பயணிகள்!!தொடரும் கல்வீச்சு கண்ணாடி உடைப்பு!

Parthipan K

Updated on:

வந்தே பாரத் ரயிலால் அலரும் பயணிகள்!!தொடரும் கல்வீச்சு கண்ணாடி உடைப்பு!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீசப்பட்டு கண்ணாடிகள் உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது திட்டமிட்ட சதியா என இரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஏற்கனவே வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகள் ஆர்வம் காட்டவில்லை என குழம்பி வருகின்றனர். தொடர் நஸ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

மேலும் கடந்த புதன்கிழமை அன்று உத்தரபிரதேசத்தில் ஆடுகள் மீது வந்தே பாரத் ரயில் மோதியதால் ஏற்பட்ட கோபத்தில் கற்கள் வீசி கண்ணாடிகள் உடைக்கப்பட்ட சம்பவம் பயணிகளுக்கு இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு மற்றும் கண்ணாடி உடைப்பு தொடர் கதையாகி வருகிறது வருகிறது.

மேலும் ரயில் கண்ணாடிகளை சரி செய்வதற்கும் பழுது பார்ப்பதற்கும் பல லட்சம் செலவு வருவதாக புலம்புகின்றனர்.

மேலும் சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூரு வழியாக மைசூர் வரையிலும், சென்னையில் இருந்து கோவைக்கும் என இரண்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மைசூர் செல்லும் வந்தே பாரத் ரயில் இன்று அதிகாலை சென்ட்ரல் நடைமேடைக்கு வந்தது.

அப்போது ரயிலில் ஏறிய பயணிகள் ரயிலின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு உள்ளே கற்கள் சிதறி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதிச்சி அடைந்த பயணிகள் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

பின்னர் கண்ணாடிகள் புதியதாக மாற்றப்பட்டு பயணிகளை அஞ்ச வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்.அதன் பிறகு எப்பொழுதும் போல காலை 5.55 மணிக்கு ரயில் புறப்பட்டு சென்றது. இந்த சதி வேலையை செய்தவர்களை தேடி வருகின்றனர்.