போலி மருத்துவராக வனிதா! போலீசாரிடம் வலமாக சிக்கி தவிப்பு!
இந்த கொரோனா தொற்றால் மக்கள் பெருமளவு பாதித்து வருகின்றனர்.இந்நிலையில் கொரோனாவின் 1 அலையை விட இரண்டாம் அலையானது பெருமளவு பாதிப்பாக இருந்தது.அந்தவகையில் மக்கள் ஆக்சிஜன் இன்றியும் கொரோனா தடுப்பூசி இன்றியும் தவித்து வந்தனர்.இந்நிலையை பல மோசடி கும்பல் பயன்படுத்திக்கொண்டது.
அந்தவகையில் போலியான தடுப்பூசி மருந்துகள்,மாத்திரைகள் என பலவற்றை விற்று அப்பாவி மக்களை ஏமாற்றி வந்தனர்.அதுமட்டுமின்றி இந்த கொரோனா காலக்கட்டத்தில் மருத்துவர்கள் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்ள வேண்டும் என கூறுகின்றனர்.அதனை உணவுகளாக எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் கூறுகின்றனர்.அந்தவகையில் மோசடி கும்பல் பலர் அதனை பயன்படுத்திக்கொண்டு சந்தைகளில் நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய மருந்துகள் என கூறி விற்கின்றனர்.மக்களும் அதனை வாங்கி உட்கொள்கின்றனர்.ஒருசிலர் இதனை உண்டால் கொரோனா தொற்றே வராது எனக்கூறி தங்களின் போலி மருந்துகளை விற்று வருகின்றனர்.
அவ்வாறு தான் அமேசான் இணையத்தளத்தில் ஆயுஷ் அமைச்சகம் அனுமதி தந்ததாக கூறி tulsi drops என்ற போலியான மருந்தை விற்று வந்துள்ளனர்.இது அவர்கள் அனுமதி முறையில் தயரான மருந்து அல்ல என்று ஆயுஷ் நிறுவனம் கூறியது.அதுமட்டுமின்றி அம்மருந்தானது அரசு அனுமதி பெற்றது எனக்கூறி போலியாக விற்பனை செய்யப்பட்டது.அதனால் அந்நிறுவனம் அம்மருந்தை யாரும் உபயோகம் செய்ய வேண்டாம் என்று மக்களிடம் கூறியது குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே 8ம் வகுப்பு படித்த இரு பெண்கள் போலி மருத்துவராக மக்களுக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.அவர்களில் ஒருவர் பெயர் வனிதா என்பது குறிப்பிடத்தக்கது.இவர்கள் போலி மருத்துவர்கள் என்ற செய்தி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.மக்கள் இந்த காலக்கட்டத்தில் போலி தனமின்றி நம்புவது மருத்துவம் ஒன்றே ஆகும்.அதிலே தற்போது கலப்படம் வந்துவிட்டது.
மக்கள் அனைத்திலும் விழிப்புணர்வுடன் இருக்க தொடர்ந்து அரசாங்கம் வலியுறுத்தி தான் வருகிறது இருப்பினும் இம்மாறி துறைகளில் மக்களுக்கு துளியும் சந்தேகம் வரா நோக்கில் நடந்துக்கொள்வதால் மக்கள் கண்மூடி தனமாக நம்பி விடுகின்றனர்.குறிப்பாக இந்த கொரோனா காலக்கட்டத்தில் மக்கள் குணமடைய மருத்துவமனைகள் கிடைக்காமல் அலைமோதுவதினால் பக்கத்தில் இருக்கும் மருத்துவமனைகளில் முடித்தவரை சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதனால் அவர்களுக்கு போலி மருத்துவம் பற்றி தெரிவதுமில்லை.அதனால் மக்கள் முடிந்தவரை அனைத்திலும் இக்காலக்கட்டதில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.