வன்னியர் இட ஒதுக்கீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு! என்ன தீர்ப்பை வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம்?

0
132

சென்ற அதிமுக ஆட்சிக்காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது அப்போதைய தமிழக அரசு வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டிற்கான சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்றி அரசாணை வெளியிட்டார்.அவருடைய இந்த செயல்பாட்டுக்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பினர் வரவேற்பும் தெரிவித்தனர் அதேநேரம் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள்.

ஆனால் அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த சட்டம் செல்லத்தக்கதல்ல ஆனால் இது தொடர்பாக நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முக்கிய முடிவை மேற்கொண்டு வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தருவோம் என்று தெரிவித்தார்.

அவருடைய இந்தக் கருத்து அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவே அப்போது கருதப்பட்டது அதேநேரம் அது தற்போதும் நிரூபணமாகியிருக்கிறது என்றும் பலர் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த இட ஒதுக்கீடு விஷயத்தில் அதிமுக எந்த நிலையிலும் பொதுமக்களிடையே பெயர் வாங்கி விடக்கூடாது என்ற காரணத்திற்காக, திமுக சிலரின் முதுகுக்குப் பின்னாலிருந்து அவர்களை இயக்கி அந்த இட ஒதுக்கீட்டிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர செய்தது என்றும், பலர் தெரிவித்து வருகிறார்கள் என சொல்லப்படுகிறது.

அதேநேரம் தற்போதைய தமிழக அரசு மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கின் எல்லாவிதமான வாதங்களும் கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதில் திமுகவின் பல சூட்சமங்கள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அதாவது, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல ஒரு புறம் எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த இட ஒதுக்கீட்டை நீதிமன்றத்தின் மூலமாக ரத்து செய்துவிட்டு அதே இட ஒதுக்கீட்டை மறுபடியும் சட்டசபையில் தாக்கல் செய்து அதற்கு ஒப்புதல் பெற்று அந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி விட்டு அதன் மூலமாக அதிமுகவிற்கு களங்கம் விளைவிக்கலாம் என்றும் ஆளும் தரப்பு திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

அதாவது அதிமுக சட்டம் இயற்றியதில் பல குளறுபடிகள் இருக்கின்றன சட்ட விதிமுறைகள் தெளிவாக இல்லை என பல காரணங்களை தெரிவித்து உச்ச நீதிமன்றம் இந்த சட்டத்தை ரத்து செய்து விட்டது.

ஆகவே நாங்கள் இதில் உள்ள கூடுதல் அம்சங்களை ஆராய்ந்து அதன் பிறகு பலம் வாய்ந்த சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறோம். ஆகவே இந்த இட ஒதுக்கீடு சட்டத்தை நாங்கள்தான் கொண்டு வந்தோம்.

நாங்கள் தான் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டை வாங்கி கொடுத்தோம் என்று தன்னை தமிழகத்தில் நிலைநிறுத்திக்கொள்ள தன்னுடைய அடுத்த ஆயுதத்தை கையிலெடுத்திருக்கிறது திமுக என்றும் தெரிவித்து வருகிறார்கள் பலர்.

இந்த நிலையில், மிகவும் முக்கியத்துவம் பெற்ற இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வரராவ், பி.எல். கவாய் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கவிருக்கிறது.

Previous articleசெர்னோபில் அணு உலையிலிருந்து வெளியேறும் ரஷ்யப் படைகள்! போரை நிறுத்து ரஷ்யா ரஷ்ய அதிபரின் திட்டம் என்ன?
Next articleஇஸ்ரேலில் பயங்கரவாத தாக்குதல்களில் பலியான 11 பேர்! இஸ்ரேல் பிரதமரிடம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த அமெரிக்க அதிபர்!