செர்னோபில் அணு உலையிலிருந்து வெளியேறும் ரஷ்யப் படைகள்! போரை நிறுத்து ரஷ்யா ரஷ்ய அதிபரின் திட்டம் என்ன?

0
72

உக்ரைன் மீது தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா முதல்நாளில் வடக்கு உக்ரைனில் உள்ள செர்னோபில் அணு உலையை அந்த நாட்டு ராணுவம் கைப்பற்றி தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அப்போது இது உலகம் முழுவதும் பரபரப்பை உண்டாக்கியது.

ஒருவேளை செர்னோபில் அணு உலை தன்னுடைய பாதுகாப்பு தன்மையை இழந்து அந்த அணு உலை வெடிக்கத் தொடங்கினால் அது உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பலரும் தெரிவித்து வந்தார்கள்.

இதுகுறித்து உக்ரைன் அரசு தெரிவிக்கும் போது செர்னோபில் அணு உலையை ரஷ்யா ஆக்கிரமிப்பாளர்கள் கைப்பற்றியிருக்கிறார்கள் இதனால் கோடிக்கணக்கான உயிர்கள் அச்சுறுத்தலிலிருக்கின்றன என தெரிவித்தது.

ஆனாலும் செர்னோபில் அணு உலை மீது பயங்கரவாத அமைப்புகளும், தேசியவாதக் குழுக்களும், தாக்குதல் நடத்த வாய்ப்பிருக்கிறது என்ற காரணத்தால் அந்தஅணு உலையின் பாதுகாப்பதற்காகவே அதனை கைப்பற்றியிருக்கிறோம் என்று ரஷ்ய ராணுவ அமைச்சகம் தெரிவித்தது.

இந்த நிலையில், செர்னோபில் அணு உலையிலிருந்து ரஷ்ய படைகள் வெளியேற ஆரம்பித்திருக்கின்றன என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்திருக்கிறது.
இந்த செர்னோபில் அணு உலையிலிருந்து ரஷ்யப் படைகள் பின் வாங்கியதன் நோக்கம் என்ன என்பது தொடர்பாக தற்சமயம் கேள்வி எழ தொடங்கியிருக்கிறது.

அதாவது இங்கிருந்து ரஷ்ய படைகள் பின் வாங்கியது தன்னுடைய போரை நிறுத்துவதற்கான அறிகுறியா? என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இனி மெல்ல, மெல்ல, ரஷ்யப் படைகள் தங்களுடைய ஆக்கிரமிப்புகளிலிருந்து விலகும் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

கடந்த ஒரு மாத காலமாக உக்ரைன் மீது கடுமையான தாக்குதலை நடத்தி வந்த ரஷ்ய படைகள் தற்சமயம் இந்த செர்னோபில் அணு உலையில் இருந்து விலகி இருப்பது பலருக்கும் நிம்மதியை கொடுத்திருக்கிறது. இதே உத்வேகத்துடன் தங்களுடைய ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் வீட்டு ரஷ்ய படைகள் வெளியேற வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

ஆனால் இதனை நாம் அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் என்ன மாதிரியான முடிவை மேற்கொள்ளவிருக்கிறார் என்பதையும் உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

ஏனென்றால் ரஷ்ய அதிபர் மிகவும் தந்திரசாலி ஏதாவது ஒரு விஷயத்தை அவர் செய்கிறார் என்றால் அதன் பின்னர் ஏதாவது ஒரு பெரிய காரணமிருக்கும் அப்படி ஏதோ ஒரு காரணத்திற்காக தான் இதனை அவர் செய்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது.

அதேபோல இந்த செர்னோபில் அணு உலையிலிருந்து ரஷ்ய படைகள் வெளியேறுவதற்கு என்ன காரணம் ரஷ்ய அதிபர் இதனை செய்வதற்கான முக்கிய காரணம் என்ன என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.