இஸ்ரேலில் பயங்கரவாத தாக்குதல்களில் பலியான 11 பேர்! இஸ்ரேல் பிரதமரிடம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த அமெரிக்க அதிபர்!

0
62

இஸ்ரேல் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்திருக்கின்ற டெல் அவிவ் நகரில் மர்ம நபர் நேற்று திடீரென்று துப்பாக்கி சூடு நடத்திய தாக்குதலில் 5 பேர் பலியானார்கள். அங்கே விரைந்து சென்ற காவல் துறையைச் சார்ந்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை சுட்டுக் கொன்றார்கள்.

இஸ்ரேல் நாட்டில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு அந்த நாட்டு பிரதமர் கண்டனம் தெரிவித்தார். இஸ்ரேல் அரபு பயங்கரவாத அறையில் சிக்கியிருக்கிறது என்று அந்நாட்டு பிரதமர் பென்னட் தெரிவித்திருக்கிறார்.

இஸ்ரேலில் ஒரே வாரத்தில் தொடர்ந்து 3 பயங்கரவாத தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. இந்த நிலையில், பிரதமர் நப்தாலி பென்னட் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியான சூழ்நிலையில், அமெரிக்க அதிபருடன் இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட்டை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாற்றினார் அப்போது இஸ்ரேலில் சமீபத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களில் பலியான 11 பேரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்திருக்கிறது.