Varicose Vein பிரச்சனையால் வலி உயிர் போகிறதா.. உடனடி நிவாரணம் கிடைக்க இதை செய்யுங்கள்!!

Photo of author

By Rupa

வெரிக்கோஸ் எனும் நரம்பு சுருட்டல் குணமாக இங்கு தரப்பட்டுள்ள வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தவும்.

Tips 01

தேவையான பொருட்கள்:

1)குப்பைமேனி இலை

2)சின்ன வெங்காயம்

3)சுண்டைக்காய்

4)நெருஞ்சில்

5)வில்வம்

செய்முறை:

இரண்டு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு உரலில் போட்டு இடித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து 10 குப்பைமேனி இலை,ஐந்து பச்சை சுண்டைக்காய்,இரண்டு வில்வ இலை மற்றும் நெருஞ்சில் இலையை உரலில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து விழுது பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

இந்த விழுதில் அரைத்த சின்ன வெங்காய பேஸ்டை கலந்து நரம்பு சுருட்டல் மீது அப்ளை செய்தால் வெரிக்கோஸ் பாதிப்பு குணமாகிவிடும்.நரம்பு சுருட்டலுக்கு இந்த ஒரு பேஸ்ட் சிறந்த தீர்வாக உள்ளது.

Tips 02

தேவையான பொருட்கள்:

1)துளசி

2)வசம்பு

3)மஞ்சள் தூள்

4)கற்றாழை ஜெல்

 

செய்முறை:

 

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் பயன்படுத்தி மருந்து தயாரிக்க வேண்டும்.முதலில் கால் கைப்பிடி துளசி இலை,ஒரு துண்டு வசம்பு,1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி கற்றாழை ஜெல்லை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள்.

இந்த பேஸ்டை நரம்பு சுருட்டல் மீது பூசினால் ஓரிரு தினங்களில் வெரிக்கோஸ் பாதிப்பு குணமாகிவிடும்.

Tips 03

தேவையான பொருட்கள்:

1)மாதுளை

2)அருகம்புல்

3)வெட்டிவேர்

4)ஜாதிக்காய்

செய்முறை:

முதலில் ஒரு மாதுளம் பழத்தின் விதைகளை மிக்சர் ஜாரில் ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு சிறிதளவு அருகம்புல்லை மிக்சர் ஜாரில் போட்டு கால் கிளாஸ் தண்ணீர் ஊற்றி அரைத்து ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.அதன் பிறகு சிறிதளவு வெட்டி வேர் மற்றும் ஒரு ஜாதிக்காயை தனித் தனியாக பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இல்லையென்றால் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் வெட்டிவேர் பொடி மற்றும் ஜாதிக்காய் பொடி வாங்கிக் கொள்ளவும்.

பிறகு ஒரு கிண்ணத்தில் அரைத்து வைத்துள்ள மாதுளை சாறு சேர்க்கவும்.அடுத்து அதில் அருகம் புல் சாறை கலந்துவிடவும்.

பிறகு கால் தேக்கரண்டி வெட்டிவேர் பொடி மற்றும் கால் தேக்கரண்டி ஜாதிக்காய் பொடி சேர்த்து நன்கு கலந்து பருகினால் வெரிக்கோஸ் குணமாகும்.