Breaking News, Cinema

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்த ராக்கி பட ஹீரோ

Photo of author

By Vinoth

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்த ராக்கி பட ஹீரோ

Vinoth

Button

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்த ராக்கி பட ஹீரோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பாக இருக்கும் இந்த திரைப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் முகநூலில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

பீஸ்ட் படத்துக்கு முன்பே இந்த படத்தில் ஒப்பந்தம் ஆனார் நெல்சன். ஆனால் பீஸ்ட் வெளியான பின்னர் அந்த படம் தோல்விப் படமாக அமைந்ததால் கடும் விமர்சனங்கள் நெல்சன் மேல் எழுந்தன. சமூகவலைதளங்களில் பல ட்ரோல்களும் உருவாகின. இதையடுத்து இப்போது இந்த படத்தின் திரைக்கதை வேலைகளில் நெல்சன் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுபற்றிய சமீபத்தைய தகவல் ஒன்று இப்போது வெளியாகியுள்ளது. வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஐதராபாத்தில் செட் ஒன்று அமைக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் தெலுங்கு சினிமாவில் ஸ்ட்ரைக் அறிவிக்கப்பட்டுள்ளதால் எதிர்பார்த்தபடி படப்பிடிப்பு தொடங்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் தரமணி மற்றும் ராக்கி படங்களின் கதாநாயகன் வசந்த் ரவி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாக சைதன்யாவோடு இணைந்த வீட்டை அடம்பிடித்து வாங்கிய சமந்தா!

வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிற விண்வெளி உடை ஏன் அணிகிறார்கள்!!

Leave a Comment