வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிற விண்வெளி உடை ஏன் அணிகிறார்கள்!!

0
96

வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிற விண்வெளி உடை ஏன் அணிகிறார்கள்!!

விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு பயணம் செல்லும் பொழுது ஒரு சில நேரங்களில் ஆரஞ்சு நிற விண்வெளி உடையை அணிந்து இருப்பார்கள்.ஒரு சில நேரங்களில் வெள்ளை நிற விண்வெளி உடையை அணிந்து இருப்பார்கள். இப்படி விண்வெளி வீரர்கள் ஏன் இந்த இரண்டு விதமான வெவ்வேறு உடைகளை அணிகின்றனர் என்பதை எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா?

ஆரஞ்சு நிற விண்வெளி உடை அட்வான்ஸ்டு க்ரூ எஸ்கேப் சூட் என்று அழைக்கப்படுகிறது.
ஆரஞ்சு நிற அட்வான்ஸ்டு க்ரூ எஸ்கேப் சூட் உடையில் சர்வதேச ஆரஞ்சு நிறம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இந்த குறிப்பிட்ட நிறம் எந்த வகையான நிலப்பரப்பிலும் தெரியும். குறிப்பாக கடலில் மிகவும் அதிகமாக தெரியும்.
விண்வெளிக்கு செல்லும் விண்கலம் புறப்படும்போதும் மற்றும் தரையிறங்கும்போதும் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் விண்வெளி வீரர்கள் உயிர் பிழைக்க உதவும் வகையில் அட்வான்ஸ்டு க்ரூ எஸ்கேப் சூட் உடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஆரஞ்சு நிற உடை ஒரு பாராசூட்டை விரிக்கும் ரிப்கார்டுடன் இருக்கும். அவசர காலங்களில் பயன்படுத்த ஒரு கத்தியையும் கொண்டுள்ளது. அவசர காலத்தில் விண்வெளி வீரரின் முதுகில் இருக்கும் பாராசூட்டை திறக்க இந்த ரிப்கார்டு உள்ளது. ஒருவேளை பாராசூட் திறக்காமல் மாட்டிக்கொண்டால் பாராசூட் கயிறுகளை வெட்டுவதற்கு ஒரு கத்தி உள்ளது. கூடவே பின்புறத்தில் ஒரு லைஃப் ராஃப்ட் இருக்கும். அது தண்ணீரில் விண்வெளி வீரர் விழுந்தால் உடனடியாக திறந்துவிடும்.இது பார்க்க படகை போல இருக்கும்.

ஆரஞ்சு நிற உடையில் உள்ள உயிர்வாழும் கிட் மலையேறுபவர்கள் பயன்படுத்துவதைப் போலவே உள்ளது. இதில் ரேடியோ மோஷன் சிக்னஸ் மாத்திரைகள் மற்றும் கையுறைகள் உள்ளன. இவை பூமியின் வளிமண்டலத்தில் நன்றாக வேலை செய்யக்கூடியது.

வெள்ளை நிற எக்ஸ்ட்ராவெஹிகுலர் ஆக்டிவிட்டி உடைகள் பருமனாகவும், வெள்ளை நிறமாகவும் இருக்கும். ஏனென்றால் வெள்ளை நிறமானது சூரியனின் அதிக வெப்பத்தை பிரதிபலிக்கிறது. ஆனால் இந்த இரு நிறங்களும் முற்றிலும் வேறுபட்டவை. குறிப்பிட்ட நோக்கங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.

எக்ஸ்ட்ராவெஹிகுலர் ஆக்டிவிட்டி சூட் எனப்படும் வெள்ளை நிற உடை குறிப்பாக விண்வெளி நடைப்பயணத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.

வெள்ளை உடையில் நீர் குளிரூட்டும் அமைப்பு உள்ளது. இது விண்வெளியில் உயிர்வாழ்வதற்கு அவசியமானது.சூட்களில் உள்ள நீர் குளிரூட்டும் அமைப்பு கடினமான சூழ்நிலையில் ஒரு விண்வெளி வீரரை குளிர்ச்சியாக வைத்து உடல் வியர்வையை மறுசுழற்சி செய்கிறது. ஆறு மணி நேர விண்வெளி நடைப்பயணத்திற்கு தேவையான தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு இன் சூட் டிரிங்க் பேக் உள்ளது.

இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு முன் டி-ஷர்ட்டை மாற்றுவது, ஜீன்ஸ் அணிவது போன்ற எளிமையான உடைகள் அல்ல இந்த விண்வெளி உடைகள் என்று. இந்த உடைகளை விண்வெளி வீரர்கள் அணிவதற்கு தனியாக பயிற்சியும் கொடுக்கப்படுகிறது.

author avatar
Parthipan K