“வெஜ் மட்டன் குழம்பு” இப்படி செய்தால் வேற லெவல்ல இருக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க!!

0
67
#image_title

“வெஜ் மட்டன் குழம்பு” இப்படி செய்தால் வேற லெவல்ல இருக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க!!

புரட்டாசி மாதம் நடந்து கொண்டிருப்பதால் பலரும் நான்-வெஜ் சாப்பிடமால் முடியவில்லை என்று வருத்தத்தில் இருக்கிறார்கள்.அவர்களின் வருத்தத்தை போக்க மட்டன் சுவையில் மீல் மேக்கர் குழம்பு அதாவது வெஜ் மட்டன் குழம்பு செய்வது குறித்த தெளிவான செய்முறை விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.நான் வெஜ் சாப்பிட வேண்டும் என்ற ஏக்கம் தீர இந்த முறைப்படி குழம்பு செய்து சாப்பிடுங்கள்.

தேவையான பொருட்கள்:-

*சோயா(மீல் மேக்கர்) – 1 கப்

*எண்ணெய் – 3 தேக்கரண்டி

*பெரிய வெங்காயம் – 1(நறுக்கியது)

*தக்காளி – 2(நறுக்கியது)

*தேங்காய்(துருவல்) – 1 கப்

*பட்டை – 1 துண்டு

*சோம்பு(பெருஞ்சீரகம்) – 1/2 தேக்கரண்டி

*இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி

*மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

*கொத்தமல்லி தூள் – 1 தேக்கரண்டி

*கறிவேப்பிலை – 1 கொத்து

*கொத்தமல்லி தழை – சிறிதளவு

*கரம் மசாலா – 1/2 தேக்கரண்டி

*மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி

*உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.பின்னர் அடுப்பை அணைக்கவும்.இந்த கொதிக்க வைத்த தண்ணீரில் 1 கப் மீல் மேக்கர் போட்டு சில நிமிடங்கள் ஊற விடவும்.பின்னர் இதை குளிர்ந்த நீரில் போட்டு நன்கு பிழிந்து ஒரு தட்டிற்கு மாற்றி கொள்ளவும்.

ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் 1 கப் தேங்காய் துருவல் சேர்த்து தண்ணீர் தேவையான அளவு ஊற்றி மைய்ய அரைத்து பால் எடுத்து கொள்ளவும்.

அடுப்பில் கடாய் வைத்து அதில் 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அவை சூடேறியதும் அதில் 1 துண்டு பட்டை மற்றும் 1/2 தேக்கரண்டி சோம்பு சேர்த்து பொரிய விடவும்.பின்னர் கருவேப்பிலை மற்றும் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

பின்னர் 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது மற்றும் நறுக்கி வைத்துள்ள தக்காளி பழத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.அடுத்து மீல் மேக்கர் சேர்க்கவும்.

பிறகு 1 தேக்கரண்டி மிளகாய் தூள்,1 தேக்கரண்டி கொத்தமல்லி தூள்,1/2 தேக்கரண்டி கரம் மசாலா,1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்,தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

அடுத்து அரைத்து வைத்துள்ள தேங்காய் பால் மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.பின்னர் பச்சை வாசனை நீங்கிய பின் கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கவும்.