உடலில் இரும்புச்சத்து குறைபாடு இருப்பவர்கள் எடுத்து கொள்ள வேண்டிய காய்கறி மற்றும் கீரைகள்!!

0
119
#image_title

உடலில் இரும்புச்சத்து குறைபாடு இருப்பவர்கள் எடுத்து கொள்ள வேண்டிய காய்கறி மற்றும் கீரைகள்!!

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு ஆரோக்கியமானதாக இருப்பது மிகவும் அவசியம்.ருசிக்காக ஆரோக்கியத்தை கெடுத்து கொள்ளாமல் தினசரி வாழ்வில் முடிந்தளவு காய்கறி,பழங்களை உணவாக எடுத்து கொள்வதை வழக்கமாகி கொள்ளுங்கள்.

இன்றைய காலத்தில் உள்ள உணவு முறை பழக்கம் உடலுக்கு கேடு விளைவிக்க கூடியவையாக இருக்கிறது.இதனால் எளிதில் பல்வேறு நோய் பாதிப்பிப்புகளுக்கு ஆளாகி விடுகிறோம்.எனவே நாம் உணவு முறையில் சில கட்டுப்பாடுகளை கொண்டு வருவது மிகவும் முக்கியமான ஒன்று.

நம் உடலுக்கு தேவையான சத்துக்களில் முக்கியமான ஒன்று இரும்புச்சத்து.இந்த சத்து நம் உடலில் குறைந்தால் உடல் சோர்வு,மூச்சு திணறல்,ஒழுங்கற்ற மாதவிடாய்,ரத்தம் சம்மந்தபட்ட நோய் பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. இரத்த சிவப்பணுக்கள் குறைபாடு, இரத்த சோகை,ஒழுங்கற்ற இதயத் துடிப்பு போன்றவை ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.

எனவே இரும்புச்சத்து நிறைந்துள்ள காய்கறி,பழங்களை உணவில் எடுத்து கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

இரும்புச்சத்து குறைபாடு நீங்க நாம் தினசரி உணவில் எடுத்து கொள்ள வேண்டிய காய்கறிகள் மற்றும் கீரைகள்:-

*உடலில் இரும்புச்சத்து குறைபாடு நீங்கி உடல் வலுப்பெற ப்ரோக்கோலியை உணவாக எடுத்து கொள்வது நல்லது.இதில் 0.52 மில்லி கிராம் இரும்புச்சத்து இருக்கிறது.

*நாம் தினசரி உணவில் பயன்படுத்தி வரும் முக்கிய காய்கறியான தக்காளியில் 4.45 மில்லி கிராம் இரும்புச்சத்து இருக்கிறது.

*பொரியல்,சாம்பார் உள்ளிட்டவற்றில் சேர்க்கப்படும் பச்சை பீன்ஸில் 0.96 மில்லி கிராம் இரும்புச்சத்து நிறைந்து இருக்கிறது.இதை அடிக்கடி உணவாக எடுத்து கொள்வது நல்லது.

*நம் அனைவருக்கும் பிடித்த கிழங்கு வகைகளில் ஒன்று உருளைக்கிழங்கு.இதில் பொரியல்,வறுவல்,குழம்பு உள்ளிட்ட உணவு வகைகள் செய்து உண்ணப்பட்டு வருகிறது.உடம்பில் இரும்புச்சத்து குறைபாடு இருக்கும் நபர்கள் உருளைக்கிழங்கை உணவாக எடுத்து வருவது நல்லது.காரணம் இதில் 0.55 மில்லி கிராம் இரும்புச்சத்து இருக்கிறது.

*கீரை வைகளை எடுத்து கொண்டும் என்றால் பசலை கீரையில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளது.அதுமட்டும் இல்லாமல் சுண்ணாம்புச்சத்து,வைட்டமின் ஏ,பி,சி மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்களும் அதிகளவில் இருக்கிறது.இதை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.

*அதேபோல் முருங்கை கீரையில் ஏகப்பட்ட சத்துக்கள் அடங்கி இருக்கிறது.இதில் உள்ள இரும்புச்சத்து மனித உடலில் உள்ள ரத்த சோகை,ரத்த சிவப்பணுக்கள் குறைபாடு உள்ளிட்டவற்றை குணப்படுத்தும் தன்மை கொண்டிருக்கிறது.முடி வளர்ச்சி குறைபாடு,உடல் பருமன்,பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை உள்ளிட்டவற்றையும் சரி செய்யும் தன்மை இந்த முருங்கை கீரைக்கு இருக்கும்.

Previous articleசேலம் ஸ்பெஷல் கறிமசால் தூள் செய்வது எப்படி? ஹோட்டலில் கறிக்குழம்பு சுவையாக இருக்க காரணம் இது தான்!!
Next articleதிண்டுக்கல் தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி ருசியாக செய்வது எப்படி?