சேலம் ஸ்பெஷல் கறிமசால் தூள் செய்வது எப்படி? ஹோட்டலில் கறிக்குழம்பு சுவையாக இருக்க காரணம் இது தான்!!

0
97
#image_title

சேலம் ஸ்பெஷல் கறிமசால் தூள் செய்வது எப்படி? ஹோட்டலில் கறிக்குழம்பு சுவையாக இருக்க காரணம் இது தான்!!

உணவகங்களில் அசைவ உணவின் சுவையை கூட்டும் சேலம் ஸ்பெஷல் கறிமசால் தூள் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.இந்த பொடியை கோழிக்கறி,ஆட்டுக்கறி சமைக்கும் பொழுது அதில் சேர்த்து குழம்பு வைத்து பாருங்கள் உணவகங்களில் கிடைக்கும் அதே சுவையில் இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

கொத்தமல்லி விதை – 5 தேக்கரண்டி

சோம்பு – 2 தேக்கரண்டி

மிளகு – 1 தேக்கரண்டி

காய்ந்த ரோஜா இலைகள் – 2 தேக்கரண்டி

கசகசா – 2 தேக்கரண்டி

பட்டை – 15 துண்டுகள்

ஜாதிக்காய் – 1

பிரியாணி இலை -1

ஜாதிபத்திரி – 2

மராட்டி மொக்கு – 8

கிராம்பு – 1 தேக்கரண்டி

செய்முறை:-

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் கொத்தமல்லி விதை,சோம்பு,மிளகு சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும்.இதை ஒரு தட்டிற்கு மாற்றி கொள்ளவும்.

அதன் பின் அதே கடாயில் கசகசா சேர்த்து பொரியும் வரை வறுக்கவும்.அதோடு 2 தேக்கரண்டி பிரியாணிக்கு பயன்படுத்தும் காய்ந்த ரோஜா இலைகள் சேர்த்து கொள்ளவும்.இதை ஏற்கனவே வறுத்து வைத்துள்ள கொத்தமல்லி,சோம்பு தட்டிருக்கு மாற்றி கொள்ளவும்.

பின்னர் அதே கடாயில் பட்டை,இலவங்கம்(கிராம்பு),ஜாதிபத்திரி,ஜாதிக்காய்,மராட்டி மொக்கு,பிரியாணி இலை சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும்.பிறகு அடுப்பை அணைத்து விடவும்.வறுத்து வைத்துள்ள அனைத்து பொருட்களையும் நன்கு ஆறவிடவும்.

பின்னர் சுத்தமான மிக்ஸி ஜாரில் இதை போட்டு பொடி செய்து கொள்ளவும்.அதன் பின் ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.பிறகு ஒரு சுத்தமான டப்பாவில் போட்டு சேமித்து வைத்து கொள்ளவும்.

இந்த மசாலா பவுடரை கோழிக்கறி குழம்பு,ஆட்டுக்கறி குழம்பு,ஆட்டு குடல் குழம்பு,உருளைக்கிழங்கு குழம்பு,காளிஃபிளவர் மற்றும் காளான் உள்ளிட்ட குழம்புகளில் சேர்த்து சமைத்தோம் என்றால் வாசனையாகவும்,ருசியாகவும் இருக்கும்.